(Source: ECI/ABP News/ABP Majha)
Aavin Cake : நெருங்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை... டஃப் கொடுக்கும் ஆவின்... குறைந்த விலையில் அறிமுகமாகும் கேக்
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு நெருங்கி வருவதால் கேக் வகைகளை தயாரித்து விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு நெருங்கி வருவதால் கேக் வகைகளை தயாரித்து விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் நிறுவனமான ஆவின் மூலம் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற ஆயுதபூஜை மற்றம் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு இனிப்பு வகைகள், மிக்சர், பட்டர் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்தது. அதன் மூலம் ரூபாய் 116 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
5 சுவைகளில் கேக்
இந்த நிலையில், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கில புத்தாண்டுக்கு மக்களுக்கு குறைந்த விலையில் கேக்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள ஆவின் பார்லர்களில் மட்டும் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5 விதமான கேக் தயாரிக்கவும், தனியாரில் விற்பனை செய்யப்படும் கேக்கை விட குறைந்த விலையில் விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கேக் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குளிர்சாதன வசதிலுள்ள பார்லர்களில் விற்பனை
கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு பண்டிக்கைக்கு தயாரிக்கப்படும் கேக்குகளை குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்யப்பட உள்ளது. தனியாரை விட நல்ல சுவையில் கேக்குகளை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிளம் கேக் விற்பனை
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் கூறியதாவது, " கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் சார்பில் 5 விதமான கேக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இது தவிர பிளம் கேட்கும் தயாரிக்கபடும் என்று தெரிவித்தார். மேலும் மற்ற நிறுவனங்களை விட தரத்துடனும் விலை குறைவாகவும் விற்னை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு அதிகளவில் நெய் விற்க திட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு அதிகளவில் நெய்களை தயாரித்து விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 100 கிராம் நெய் 10 ஆயிரம் தான் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொங்களுக்கு அதிகளவில் தயாரிக்க திட்டம். ஏழை எளிய மக்கள் பொங்கலை எந்த குறையும் இல்லாமல் கொண்டாட ஏதுவாக நெய் அதிகளவில் தயாரித்து விற்பனை செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க