மேலும் அறிய

ரூ.405.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4644 புதிய குடியிருப்புகள்: திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4644 புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4644 புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 

மேலும், 4500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11,300 பயனாளிகளுக்கு ரூ.237.30 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகள், 350 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான கிரயப் பத்திரங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் 8 மாவட்டங்களில் 15 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11,300 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், 350 பயனாளிகளுக்கு மற்றும் மனைகளுக்கான கிரயப் பத்திரங்களையும் வழங்கிடும் அடையாளமாக 8 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புர ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வாசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புர எழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம், கண்ணன்கரடு (மைலம்பாடி) திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.41.02 கோடி செலவில் 492 அடுக்குமாடி குடியிருப்புகள்.

நேதாஜி நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.17.70 கோடி செலவில் 204 அடுக்குமாடி குடியிருப்புகள், தஞ்சை ஊத்துக்குளி திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.8.25 கோடி செலவில் 96 அடுக்குமாடி குடியிருப்புகள், இச்சிப்பாளையம் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.24.76 கோடி செலவில் 276 அடுக்குமாடி குடியிருப்புகள், குமரன் நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.9.31 கோடி செலவில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள்.

கோயம்புத்தூர் மாவட்டம் ஐயுடிபி திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் ரூ.46.44 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள், சூலூர் பகுதி-3 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.41,88 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தனங்களுடன் ரூ.5.44 கோடி செலவில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள்.

திருப்பூர் மாவட்டம், புதூர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.12.78 கோடி செலவில் 156 அடுக்குமாடி குடியிருப்புகள், பூண்டிநகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.18.80 கோடி செலவில் 224 அடுக்குமாடி குடியிருப்புகள்.

மதுரை மாவட்டம், கருத்தபுளியம்பட்டி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.84.20 கோடி செலவில் 912 அடுக்குமாடி குடியிருப்புகள்.

கரூர் மாவட்டம், புலியூர் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.24.91 கோடி செலவில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள்: சேலம் மாவட்டம், புதுப்பாளையம் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ12.33 கோடி செலவில் 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்.

புதுக்கோட்டை மாவட்டம். போஸ்நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.35.14 கோடி செலவில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள்: கடலூர் மாவட்டம், பனங்காட்டு காலனி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.22.94 கோடி செலவில் 240 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்.

என மொத்தம் ரூ.405.90 கோடி செலவில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4644 குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இன்றைய தினம் முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய குடியிருப்புகள். ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி. குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, சிறுவர் பூங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வாதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. "நம் குடியிருப்பு, நம் பொறுப்பு" திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்று, 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 11,300 105 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.210 லட்சம் வீதம் 237 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக பயனாளிகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 150 பத்திரங்களும், மனைகளுக்கான 200 கிரயப் பத்திரங்களும் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச். கிருஷ்ணணுண்ணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Anbil Mahesh: ரூ.2.152 கோடி என்ன உங்கள் வீட்டுப் பணமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
Minister Anbil Mahesh: ரூ.2.152 கோடி என்ன உங்கள் வீட்டுப் பணமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புLoan Agent Harassment | ’’ரோட்டுல தள்ளி அடிச்சாங்க குழந்தை ABORTION ஆகிடுச்சு’’ கலங்கி நிற்கும் தாய் | VPMNamakkal Collector : ’’பாதையை அடைச்சா அவ்ளோதான்’’அதிகாரிகளை அலறவிட்ட கலெக்டர்..காலில் விழுந்த மக்கள்H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education Policy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Anbil Mahesh: ரூ.2.152 கோடி என்ன உங்கள் வீட்டுப் பணமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
Minister Anbil Mahesh: ரூ.2.152 கோடி என்ன உங்கள் வீட்டுப் பணமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.