(Source: ECI/ABP News/ABP Majha)
1 Year of Stalin Govt: திமுக ஆட்சியின் இந்த ஓராண்டில் அதிகம் பயன் பெற்றது யார்? கருத்துக்கணிப்பில் பதில் இதுதான்..
தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியில் எந்தெந்த திட்டத்தால் எந்தெந்த கட்சியைச் சார்ந்தவர்கள் அதிக பயன் அடைந்துள்ளனர் என்பது ஏபிபி - சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று சமீபத்தில் தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி நிறைவு பெற்றது.
இந்த ஓராண்டு காலத்தில் தி.மு.க. ஆட்சியில் மகளிர்களுக்கான இலவச பயணம், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஓராண்டில் தி.மு.க.வின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களினால் எந்தெந்த கட்சியைச் சார்ந்தவர்கள் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர் என்பது ஏபிபி மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அவற்றின் முழு விவரத்தை கீழே காணலாம்.
மகளிர்களுக்கான இலவச பயணம் :
அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கான இலவச பயணத்தினால் தி.மு.க. கூட்டணிக் கட்சியைச் சார்ந்தவர்கள் 42.1 சதவீதத்தினர் பயன்பெற்றுள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 26.9 சதவீதத்தினரும் பயன்பெற்றுள்ளனர். அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 42.1 சதவீதத்தினரும், கமல்ஹாசனின் மக்கள்நீதிமய்யம் கட்சியைச் சார்ந்தவர்கள் 38.5 சதவீதத்தினர் பயன்பெற்றுள்ளனர். சீமானின் நாம் தமிழர் கட்சியினர் 40 சதவீதத்தினர் பயன் அடைந்துள்ளனர். மற்றவர்கள் 27.3 சதவீத்தினர் இலவச பேருந்து பயணத்தின் பலனை அடைந்துள்ளனர். மொத்தமாக 36.9 சதவீதத்தினர் பயன் அடைந்துள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடி :
கூட்டுறவு வங்கியில் 5 சவரன்களுக்கு கீழே வைத்திருந்தவர்களுக்கான நகைக்கடன் தள்ளுபடிக்கான பயனை தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்கள் 11.1 சதவீத்தினர் பயன் அடைந்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 9.8 சதவீதத்தினர் பயன் அடைந்துள்ளனர். அ.ம.மு.க.வினர் 5.3 சதவீதத்தினர் பயன் அடைந்துள்ளனர். மக்கள் நீதிமய்யம் கட்சியைச் சார்ந்தவர்கள் 7.7 சதவீதம் பேர் பயனடைந்துள்ளனர். நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் 10 சதவீதம் பேர் பயன் அடைந்துள்ளனர். மற்றவர்கள் 8.1 சதவீதம் பேர் பயன் அடைந்துள்ளனர். மொத்தம் 10.1 சதவீதம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
முழு கருத்துக் கணிப்பு விவரம் :
பெட்ரோல் மீதான வரி குறைப்பு :
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, அவர்களது முதல் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் மீதான வரியை 3 சதவீதம் குறைத்தது. இந்த அறிவிப்பால் தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 18.9 சதவீதம் பேர் பயனடைந்தனர். அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 8.7 சதவீதம் பேர் பயனடைந்தனர். மக்கள் நீதிமய்யம் கட்சியைச் சார்ந்தவர்கள் 23.1 சதவீதம் பேர் பயனடைந்துள்ளனர். நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் 10 சதவீதம் பேர் பயனடைந்துள்ளனர். மற்றவர்கள் 18.2 சதவீதம் பேர் பயனடைந்துள்ளனர். மொத்தம் 14.7 சதவீதம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
உங்கள் தொகுதியில் முதல்வர் :
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 7.9 சதவீதம் பேர் பயன்பெற்றுள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 4.8 சதவீதம் பேர் பயன்பெற்றுள்ளனர். அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 5.3 சதவீதம் பேர் பயன்பெற்றுள்ளனர். மக்கள் நீதிமய்யம் கட்சியைச் சார்ந்தவர்கள் 7.7 சதவீதம் பயனடைந்துள்ளனர். மொத்தம் 6.3 சதவீதம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
மேற்கண்ட எதுவுமில்லை:
மேற்கண்ட எதுவுமில்லை என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 20 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 50 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 47.4 சதவீதம் பேரும், மக்கள் நீதிமய்யத்தினர் 23.1 சதவீதம் பேரும், நாம் தமிழர் 40 சதவீதம் பேரும் மற்றவர்கள் 45 சதவீதம் பேரும் மொத்தமாக 32 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்