”தரையில் ஊர்ந்த தமிழ்நாட்டை, இன்று தலை நிமிர வைத்துள்ளோம்..” - முதலமைச்சர் முக ஸ்டாலின்
தரையில் ஊர்ந்து கொண்டிருந்த தமிழ்நாட்டை நெஞ்சை நிமிர்த்தி நிற்க தொடங்கி இருக்கிறது என சேலத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசிவருகிறார்.
சேலம் ஆத்தூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசிவருகிறார். அப்பொழுது பேசிய அவர், 10 ஆண்டுகள் முடங்கி கிடந்த தமிழ்நாடு புத்துணர்ச்சி பெற்றுள்ளது. தரையில் ஊர்ந்து கொண்டிருந்த தமிழ்நாட்டை நெஞ்சை நிமிர்த்தி நிற்க தொடங்கி இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுக ஆட்சி ஒருபோதும் ஆன்மிகத்துக்கு எதிராக இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை. ஆன்மிகத்தின் பெயரால் திமுக ஆட்சி மீது சிலர் குறை சொல்ல தொடங்கியுள்ளனர். குறை சொல்வதற்கு வேறு எதுவும் காரணம் இல்லாததால் ஆன்மிகத்தின் பெயரால் அவதூறு பரப்புகின்றனர். ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்து சமய அறநிலையத்துறையையும் உள்ளடக்கிய ஆட்சியே திமுக ஆட்சி என கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்