![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Family Planning Death Issue: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு... உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அமர்ந்து உறுப்பினர்கள் தர்ணா.
![Family Planning Death Issue: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு... உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு Salem news Woman dies due to family planning Relatives protest collector office - tnn Family Planning Death Issue: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு... உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/20/bad11091bee8c32cf3201fbe3945e7ec1732098931835113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பனைமடல் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான முருகன். இவரது மனைவி செல்லம். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக கடந்த 14 ஆம் தேதி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுகப்பிரசவமாக குழந்தை பிறந்த நிலையில் செல்லத்திற்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனை மருத்துவர்கள் செய்துள்ளனர். இதில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லத்தை அனுமதித்தனர்.
தொடர்ந்து செல்லம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எதற்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் தான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் நேற்று கருமந்துறை - ஏத்தாப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழந்த செல்லம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார். மறியல் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த பெண்ணிற்கு உடற்கூறு ஆய்வு மருத்துவக் குழு மூலம் செய்ய வேண்டும். குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த உதவி கமிஷனர் தலைமையிலான காவல்துறையினர் அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)