மேலும் அறிய

PM Modi: தியான நாடகம்; பதவிக்காக மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் - செல்வப்பெருந்தகை

குமரியில் பிரதமர் நடத்தும் தியான நாடகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அவமானம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை பஞ்சாப்பில் முடித்துவிட்டு நாளை அதாவது மே 30ஆம் தேதி அங்கிருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சென்று அங்குள்ள விவேகானந்தர் பாறையில், நாளை மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி காலை வரை தியானம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிரதமரின் வருகையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 

”2024 மக்களவைத் தேர்தல் இறுதி பரப்புரை முடிந்து, மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்து, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்வதென நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார். இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் ‘தியான நாடகம்” ஒரு உதாரணமாகும். 

சுவாமி விவேகானந்தர் தம் வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கத்தைக் கடைப்பிடித்து இந்துமதத்தை உலகம் முழுவதும் பரப்பியவர். அனைத்து மதத்தினராலும் அன்போடு நேசிக்கப்பட்டவர். அவர் ஒரு சாந்த சொரூபி. அதேநேரத்தில், தமது நாவன்மையால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். அவரது ஆன்மீகப் பயணத்தில் 1893ஆம் ஆண்டில் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில், சிகாகோ நகரில் நடைபெற்ற சமய மாநாட்டில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அதில், விவேகானந்தர் உரையாற்றும் போது, ‘உலகில் அனைத்து மதங்களாலும் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும், அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த ஒரு தேசத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டதை எவரும் மறந்திட இயலாது. 

தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிய தனிவிதமான, பிரத்யேகவாதப் பார்வையைக் கொண்டவர்களை ஏளனம் செய்த விவேகானந்தர், “தான் சார்ந்திருக்கும் மதம் ஒன்று மட்டும்தான் நிலைத்திருக்க வேண்டும். மற்ற மதங்கள் அழிந்துவிட வேண்டும் என்று எவராவது கனவு கண்டால், அவருக்காக நான் என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து பரிதாபப்படுகிறேன்” என்று கூறினார். 

சுவாமி விவேகானந்தர் தமது உரையை நிறைவு செய்கிற போது, ‘ஒருவருக்கு நல்லிணக்கமும், அமைதியும் மட்டுமே தேவைப்படுகிறது. வேற்றுமை அல்ல என்றும், இதை ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும் எழுதப்பட வேண்டும்” என்று மோடிக்கு உரைக்கிற மாதிரி 131 ஆண்டுகளுக்கு முன்பு பேசியவர் சுவாமி விவேகானந்தர். 

குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திரமோடி இருந்தபோது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்டபோது, ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல கண்டும் காணாமல் இருந்தவர் தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி. இளமை காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் கோல்வால்கரின் சிந்தனைத் தொகுப்புகளைப் படித்து வளர்ந்த நரேந்திர மோடியால் சுவாமி விவேகானந்தரின் உரைகளைப் படித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே படித்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை அவருக்கு இருந்திருக்காது. 

அதிகாரவெறி, பகைமை, வெறுப்பு, பொய்மை, மனிதகுலத்தைப் பிளவுபடுத்தும் வஞ்சக புத்தி கொண்ட ஒருவருக்கு மனம் ஒன்றிய தியானம் என்றுமே கிட்டாது. ஆன்மீக மாண்புகளை மீறி மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமற்ற விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிட்ட நரேந்திர மோடி, ஆன்மீக ஞானக்கடல் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வது என்பது ஏமாற்று நாடகம்.

சுவாமி விவேகானந்தரின் போதனைகளை ஏற்று அவரைப் போற்றுபவர்கள் எவரும் நரேந்திர மோடியின் தியான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சுவாமி விவேகானந்தரை இழிவுபடுத்துகிற முயற்சியில் ஈடுபட்டு, அதன்மூலம் இந்து மதத்திற்கே களங்கம் கற்பிப்பவராக நரேந்திர மோடியின் தியான நாடகம் அமைந்திருக்கிறது. இது அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மீக நோக்கம் கொண்டதல்ல.

மே 30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல. இந்தியாவிற்கே அவமானமாகும். 

நரேந்திர மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தன்னந்தனியாக தியானம் செய்கிற மூன்று நாட்களும் அங்கு சுற்றுலா பயணிகள் எவரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
IPL SRH vs RR: சிக்ஸர் மழை! இறுதிவரை போராடிய ராஜஸ்தான்! வெற்றியுடன் தொடங்கிய ஹைதரபாத்
IPL SRH vs RR: சிக்ஸர் மழை! இறுதிவரை போராடிய ராஜஸ்தான்! வெற்றியுடன் தொடங்கிய ஹைதரபாத்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
IPL SRH vs RR: சிக்ஸர் மழை! இறுதிவரை போராடிய ராஜஸ்தான்! வெற்றியுடன் தொடங்கிய ஹைதரபாத்
IPL SRH vs RR: சிக்ஸர் மழை! இறுதிவரை போராடிய ராஜஸ்தான்! வெற்றியுடன் தொடங்கிய ஹைதரபாத்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Embed widget