மேலும் அறிய

P Chidambaram : திராவிட மாடல் என்பது மார்கெட்டிங் யுக்தி.. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்னது என்ன?

’’ஒரு காலத்தில் சோசியலிசம் என்ற சொல்லேபோதும். நான் உட்பட பல இளைஞர்கள் இடது சாரி இயக்கங்களின்பால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் சேர்ந்தோம். 

தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியின் விவரம்:-

காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்புக்கு தயாராக உள்ளதா?

இதுவரைக்கும் மாற்றம் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். மாற்றம் இல்லாமலேயே ஒரு கட்சி ஒரு தேர்தலில் தோல்வி அடையும், அடுத்த தேர்தலில் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் பெரும்பகுதி காங்கிரஸ்காரர்கள். இது 2022-க்கு பொருந்தாத நம்பிக்கை, கட்சியில் மாற்றம் செய்தால்தான் மீண்டும் கட்சி ஆட்சிக்கு வரமுடியும் என்று நான் உட்பட பலர் தெளிவாக உணர்கிறோம். உதய்பூரில் அந்த உணர்வு பரவலாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுவார்களா என்பது போகபோகத்தான் தெரியும். 

காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த பரிந்துரைகள் என்னவாக இருந்தது? 

ஒன்னும்  புரட்சிகரமான பரிந்துரை அல்ல; மேலாண்மை துறையில் ஆழ்ந்த சிந்தனையுள்ள ஒரு நபர் செய்கின்ற பரிந்துரைதான்.  அவர் சொன்னமுறை, சொன்ன விதம், ஆதாரம் காட்டிய புள்ளிவிவரங்கள் எல்லாம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தன. ஆனால் புரட்சிகரமான கருத்து என சொல்ல முடியாது. எப்படி மேலாண்மை பார்வையுடன் அணுகலாம் என்பது அவருடைய பார்வை. 

உதய்ப்பூர் மாநாட்டில் முக்கிய விவாதப்பொருளாக இருந்தது எது?

உதய்ப்பூர் மாநாட்டில் 6 பகுதிகள் இருந்தன; அதில் ஒரு பகுதி புதிய பொருளாதார கொள்கை பற்றியது. 1991-இல் புதிய பொருளாதார கொள்கை ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இன்று 31ஆண்டுகள் ஆகிவிட்டன; எனவே இந்தியாவுக்கு புதிய பொருளாதர கொள்கையை அறிவிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பரிந்துரை. 

கட்சியில் அமைப்பு ரீதியாக மாறுதல்களை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைதான் பரவலாக பேசப்படுகிறது. 2024-இல் இருந்து தேர்தலில் நிற்பதற்கு வயது உச்சவரம்பை அமல் செய்ய வேண்டும். இரண்டாவது கட்சி அமைப்புகளில் 50% பதவிகள் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தர வேண்டும். ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க வேண்டும். இதில் பல கருத்துக்கள் பரவலாக ஏற்கப்பட்டன. 

காங்கிரஸ் தலைமையை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளை தலைமை கவனிக்கிறதா?

யார் தலைவராக வருகிறார்கள் என்பதை பொருத்துதான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்; எல்லோரும் தங்களுடைய பழைய பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடே கிடையாது. நான் உட்பட; எல்லோரும் தங்களுடைய பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும்; ஏனென்றால் காலம் மாறிவிட்டது.

ஒரு காலத்தில் இந்திரா காந்தியின் முகத்தை கூட கிடையாது; இந்திரா காந்தியின் கட் அவுட்டை காட்டினாலே தேர்தலில் வெற்றி பெற்றோம். அந்த காலம் எல்லாம் மாறிவிட்டது. இன்றைக்கு அரசியல் மாறிவிட்டது. வாக்குகள் சேகரிக்கும் முறையே மாறிவிட்டது. கட்சி செயல்பாட்டில் மிகப்பெரிய குறைபாடு இருந்ததால் தேர்தலில் தோற்றோம்; ஒரு தனி மனிதர் மீது பழியை போட முடியாது. எல்லா தொகுதியிலும் பூத் கமிட்டி அமைப்பது ராகுல்காந்தி வேலையா? . எல்லோருக்கும் இது கூட்டுப்பொறுப்புதான்.  

நீங்கள் சந்தித்த முதல் தேர்தலுக்கும் இறுதியாக நடந்த தேர்தலிலும் இந்திய அரசியல் பரப்பு எப்படி மாறி உள்ளது; காங்கிரஸ் எதை இழந்துள்ளதாக நினைக்கீறீர்கள்? 

காங்கிரஸ் பலவற்றை இழந்துள்ளது. உதாரணமாக இளைய சமுதாயம் சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்சியில் சேருவது அரிதாகிவிட்டது. ஒருகாலத்தில் சோசியலிசம் என்ற சொல்லே போதும் நான் உட்பட பல இளைஞர்கள் இடது சாரி இயக்கங்களின்பால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் சேர்ந்தோம்.  இன்று அதைபோல் ஈர்க்கும் தத்துவம் எந்த கட்சியிலும் கிடையாது. பாஜக இந்துத்துவா என்ற கொள்கையை வைத்துள்ளது. அதில் பல இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் அது பொல்லாத விஷமத்தனமான தத்துவம். இளைய சமுதாயத்தை ஈர்க்க கூடிய தத்துவம் எல்லோருக்கும்  வேலை என்ற தத்துவத்தை முன்வைக்க வேண்டும் என நான் பேசியும், எழுதியும் வருகிறேன். வேலையை முன்னிருத்தி ஒரு புதிய பொருளாதார கொள்கையை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. 

சித்தாந்த அரசியலை அன்றாடத்தன்மை மூலமே வீழ்த்திவிட முடியும்  என நம்புகிறீர்களா ? 

சித்தாந்த அரசியல் வெற்றி பெரும் என்பதில் எனக்கு ஐயம் கிடையாது. ஒரு மையக்கருத்தை ஈர்க்கும் வலிமை சித்தாந்தத்திற்கு இருந்தால், இன்றைய பொல்லாத சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியும். நான் சொல்கிறேன்.. எல்லோருக்கும் வேலை தருவோம், வேலையை தந்துவிட்டுதான் அடுத்த காரியத்தை பார்ப்போம் என்பதை பதிய வைத்தாலே மாறுதல் வரும் என நான் நம்புகிறேன்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உட்பட திமுக அரசு அடையாள பூர்வமான நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது; காங்கிரஸ் அப்படி ஒரு உள்ளடக்கத்தை சிந்திக்கிறதா? 

திராவிட முன்னேற்றக் கழக அரசு பிராமணியத்தை எதிர்த்து ஒரு நிலையை உருவாக்குகிறது என்பதை நான் மறுக்கிறேன். அந்த சர்ச்சை காமராஜர் ஆட்சி முடியும்போது, அண்ணாவின் ஆட்சி தொடங்கி, கலைஞரின் முதல் ஆட்சியிலேயே அந்த சர்ச்சை முடிந்துவிட்டது. ஜெயலலிதா காலத்தில் கொஞ்சம் தூக்கி இருக்கலாம்; ஜெயலலிதா பெரியதாக பிராமணியத்தை முன்னிருத்தியதாக நான் நினைக்கவில்லை.  

திராவிட முன்னேற்றக் கழகம் புதிய யுக்தியாக, நம்முடைய அணுகுமுறைக்கு ஒரு பிராண்ட் வேண்டும் என கருதுகிறது. அது மார்க்கெட்டிங் யுக்தி அதில் ஒன்றும் தவறில்லை; திராவிட மாடல் என சொல்கிறார்கள். ஆனால் பிராமணியத்தை எதிர்த்தோ, இந்து சமயத்தை, இந்து கோயில்களில் தலையிட்டோ எதுவும் செய்வதாக நான் நினைக்கவில்லை. மாறாக பல சமுதாயத்தை சேர்ந்த அறிஞர்கள் பெரியவர்கள் சொன்னதைத்தான் செய்கிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget