Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple Employment: திருப்பதி திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Tirupati Temple Hindu Employment: என்மீது 23 கிளைமோர் கண்ணி வெடிகளால் தான் குறி வைக்கப்பட்டேன். அந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமில்லை. ஆனால், அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பத்ததற்கு காரணம், வெங்கடேஸ்வரரின் அருள்தான். வெங்கடேஸ்வரரால் மட்டுமே உயிர் பிழைத்தேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதி திருமலை கோயில்:
ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, இன்று, அவரது பேரன் பிறந்தநாளை முன்னிட்டு ,குடும்பத்துடன் திருப்பதி திருமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, “திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள், தற்போது அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள்". மேலும், உலகம் முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டுவதற்காக புதிய அறக்கட்டளையானது உருவாக்கப்படும் .

வணிக கடைகளுக்கு அனுமதியில்லை:
இந்நிலையில் ஏழு மலைகளுக்கு அருகில் எந்த வணிகமயமாக்கலும் இருக்கக்கூடாது . சைவ உணவு மட்டுமே வழங்க ஹோட்டல் நிர்வாகம் முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனியார் நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று ஆந்திர அரசாங்கம் தரப்பும் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சந்திரபாபு நாயுடு பேசுகையில், “ என் மீது பல தாக்குதல்கள நடத்த குறிவைக்கப்பட்டது. 23 கிளைமோர் கண்ணி வெடிகளால் தான் குறி வைக்கப்பட்டடேன். அந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமில்லை. ஆனால் அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பத்ததற்கு காரணம், வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே. வெங்கடேஸ்வரரால் மட்டுமே உயிர் பிழைத்தேன். நான் உயிர் பிழைத்தது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Also Read: ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
திருப்பதி தேவஸ்தானம்:
திருப்பதி தேவஸ்தாம் தரப்பு முன்னர் தெரிவித்திருந்ததாவது" தேவலோகம் திட்டத்தை மேம்படுத்த அரசு நிலம் சுற்றுலாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது, கடந்த அரசாங்கம் அதை மாற்றி மும்தாஜ் ஹோட்டலுக்கு வழங்கியது. எனவே திருமலை கோயிலுக்கு அருகிலுள்ள அலிபிரி பகுதியில் மும்தாஜ் ஹோட்டலுக்கு நில ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரியது. மேலும், கோயிலின் அறக்கட்டளை வாரியம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, குத்தகையை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமலை கோயில் பகுதியை ஒட்டியுள்ள மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் , 35.32 ஏக்கர் நிலத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஹோட்டலுக்கான ஒப்புதலை , சந்திரபாபு நாயுடு அரசாங்கம், தற்போது ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.





















