இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம்பெண்களை வைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நீதிபதிகளை மயக்கி, ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் எதிரிகளை மயக்கி, அவர்களின் பெயரை கெடுக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சதி செய்து வருவதாக பாஜக முன்னாள் அமைச்சர் சுனில் குமார் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

கர்நாடகாவில் இளம்பெண்கள் மூலம் மூத்த தலைவர்களை மயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இளம்பெண்களை வைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நீதிபதிகளை மயக்கி தங்களுக்கு சாதமானவற்றை செய்ய சிலர் முயற்சித்ததாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடக அரசியலை புரட்டி போட்ட CD:
கர்நாடகாவில் தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், இளம்பெண்கள் மூலம் அரசியல் எதிரிகளை மயக்கி, அவர்களின் பெயரை கெடுக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சதி செய்து வருவதாக பாஜக முன்னாள் அமைச்சர் சுனில் குமார் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
முதலமைச்சர் பதவிக்காக அரசியல் எதிரிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ் தலைவர் ஒருவர் இப்படி செய்து வருவதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், திட்டமிட்டு இளம்பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலையில் தானே சிக்கியதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான கே. என். ராஜண்ணா ஒப்பு கொண்டது இந்த விவகாரத்தில் பெரும் திருப்புமுனையாக மாறியது.
இளம்பெண்கள் வலையில் சிக்கிய பெரிய தலைகள்:
தான் மட்டும் இல்லாமல் எம்எல்ஏக்கள், மத்தியில் உள்ள தலைவர்கள், நீதிபதிகள் உள்பட 48 பேர் இதில் சிக்கியதாகவும் அவர் பெரிய குண்டை தூக்கி போட்டார். மேலும், இவர்களின் ஆபாச வீடியோக்களை சிலர் சிடியிலும் பென்டிரைவிலும் வைத்திருப்பதாகவும் கூறி புயலை கிளப்பினார்.
இதையடுத்து, இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் உறுதி அளித்தார். இதற்கிடையே, இந்த விவகாரம் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை முன்னிறுத்தி பாஜகவினர், கர்நாடக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்களை காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரத் மாதா கி ஜே என பாஜக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்ப, அவர்களை பேரவை காவலர்கள் தூக்கி வெளியே போட்டனர்.
இதுகுறித்து பேசிய கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர் அன்னப்ப சுவாமி, "ஒரு பெண் என்னுடன் பேஸ்புக்கில் நட்பாகி, பின்னர் என்னுடன் எடுக்கப்பட்ட நெருக்கமான வீடியோக்களைக் காட்டி மிரட்டினார்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

