Top 10 News Headlines: இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! முதல் ஹைட்ரஜன் ரயில்.. நாக்பூரில் 144 தடை - முக்கிய செய்திகள்
Top 10 News: காலை முதல் தற்போது வரை இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தெற்கு, மத்திய காசா பகுதிகளான மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராஃபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல். கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு (வந்தபின் இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.
தேர்தல் ஆணையம் ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை வாக்குகளை நீக்குவது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ஆலோசனையைத் தொடங்கி உள்ளது. மத்திய உள்துறை செயலாளர், ஆதார் செயல் அதிகாரி உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடந்த 2021 முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்.ஆதார் எண் இணைப்பைக் கட்டாயமாக்குவது குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்.
பாகிஸ்தானுக்கு இழப்பு
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.869 கோடி இழப்பு. போட்டிக்கு தயாராக ரூ.347 கோடியும், கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மைதானங்களை தயார் செய்ய |ரூ.503 கோடியும் செலவு செய்தது பாக். கிரிக்கெட் வாரியம். ஆனால் பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க, 1 போட்டிகள் மழையால் ரத்தானது மற்ற ஆட்டங்களை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஐசிசி தந்த கட்டணம், டிக்கெட் விளம்பரம் என பாகிஸ்தானுக்கு மொத்தம் ரூ.52 கோடி மட்டுமே கிடைத்தது. இழப்பை சாமாளிக்க தேசிய டி20 போட்டியின் பாசு. வீரர்களுக்கு 90% சம்பளம் குறைப்பு என தகவல்
முதல் ஹைட்ரஜன் ரயில்
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ICF) தயாரிப்பு. ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் இந்த ரயிலை தயாரிக்கும் பணிகள் 80% நிறைவு. வண்ணம் தீட்டுதல், பெட்டிகள் இணைத்தல், தொழில்நுட்ப பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல்! தலா 10 பெட்டிகள் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ₹2300 கோடி ஒதுக்கீடு செய்தது.
நாக்பூரில் 144 தடை
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மன்னர் அவுரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் பதற்றம் நீடிப்பு. வன்முறை மேலும் பரவாமல் இருக்க நாக்பூர் நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுங்க கட்டணம் நிரந்தரம்
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும். சுங்க வசூல் தொடர்பாக தணிக்கை தேவையில்லை என மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக பதிலளித்தார்.
தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு அறைக்கு உள்ளே செல்போன் பயன்படுத்திய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம். ப்பாச்சி நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு தேர்வு அலுவலராக சென்ற ஊத்துக்குளி அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன், விதிகளை மீறி தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.
செல்போன் வெடித்து பலி
கேரளாவின் ஆலப்புழா அருகே செல்போன் பேசும் போது மின்னல் தாக்கி, செல்போன் வெடித்துச் சிதறியதில் பலத்த காயமடைந்த நபர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்|. கிரிக்கெட் விளையாடும் போது, அகில் ஸ்ரீனிவாசன் (30) செல்போனில் பேசிக்கொண்டிருக்க மின்னல் தாக்கியது. அதன் எதிரொலியாக செல்போன் வெடித்ததில் தலை, மார்புப் பகுதியில் பலத்த காயடைந்து உயிரிழந்தார்.
லாரி விபத்து
நீலகிரி மாவட்டம் கக்கநல்லா - பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி பள்ளத்தில் சீறிப் பாய்ந்து விபத்து - ஓட்டுநர் மற்றும் உதவியாளர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு
அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு. மார்ச் 24 மற்றும் 25ம் தேதி இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

