Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Tn Politics : " தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக போஸ்டர் அரசியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது "
அரசியல் கட்சிகள் மக்களை ஈர்ப்பதற்கு பல்வேறு வகையில் யுக்திகளை பின்பற்றி வருகின்றன. அந்தவகையில் போஸ்டர்கள் எப்போதுமே பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும், போஸ்டர்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது, சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
போஸ்டர் அரசியல்:
போஸ்டர்கள் என்பது மக்களிடம் நேரடியாக கருத்தைக் கொண்டு செல்லும் வழிமுறையாக இருந்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போஸ்டர் ஓட்டுவது, அதன் மூலம் அரசியல் கட்சியினர் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வது, மக்களை அணுக எளிதான வழிமுறையாகவும் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: டேக்வாண்டோவில் தங்கம் வென்று சாதனை படைத்த சத்யராஜின் பேரன் - குவியும் வாழ்த்து!
அந்தவகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
யார் அந்த சார் ?
இந்த விவகாரத்தை மக்களிடையே கொண்டு செல்ல அதிமுக எடுத்த முக்கிய யுத்தியாக யார் அந்த சார் ? என்ற போஸ்டர்களை அதிமுக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஒட்டியது. இதன் மூலம் யார் அந்த சார்? என்ற கேள்வியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றது அதிமுக. இதை தொடர்ந்து அதிமுக அனைத்து மாவட்ட தலைநகரங்களையும், போராட்டத்தையும் நடத்தியது. இந்த வாசகம் அரசியல் களத்திலும் மக்கள் இடையே பேசுபொருள் ஆகியுள்ளது.
பதில் போஸ்டர்
அண்ணா பல்கலை. மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. அதிமுக போஸ்டருக்கு கவுண்டர் போஸ்டராக, அதிமுக, பாஜகவை கண்டிக்கும்விதமாக மெகா சைஸ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை படங்கள் இடம் பெற்றிருந்தன.
இதையும் படிங்க: Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
அதில், ‘‘மாதம் 1000 கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புது… பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பார்க்குது’’ சேவ் கேல்ஸ் எஜிகேசன் (SaveGirlsEducation) என ஒட்டப்பட்டிருந்தது. கீழ் பகுதியில் தமிழ்நாடு மாணவர் மன்றம், மாணவியர் பிரிவு என்ற பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
AM I NEXT - அடுத்த நானா ?
இன்று பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பசுமைத்தாயக அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் நடைபெறுகிறது. இந்தநிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் AM I NEXT - அடுத்த நானா? என கேள்வி எழுப்பும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பாமக தனது போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், திமுக அரசை விமர்சிக்கவும் இந்த போஸ்டர்களை பாமக பரப்பு ஒட்டியுள்ளது.
பாமக நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என பாமக விளக்கம் அளித்துள்ளது. Am I Next ? போஸ்டர்கள் தற்போது மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதிமுக போஸ்டருக்கு எதிர் போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், பாமகவின் போஸ்டருக்கு எதிராக என்ன போஸ்டர் ஒட்டப்பட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.