தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை! எங்கெல்லாம்? லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாக்குமரி, தென்காசி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை முதல் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும்.
இன்று அதிகாலையில் இருந்தே தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. தமிழகத்தில் இன்று நாளையும் இயல்பை விட நான் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 26டிகிரி செல்சியஸாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

