பூதாகரமாக வெடிக்கும் நயன்தாரா மீனா மோதல்...மூக்குத்தி அம்மன் பூஜையில் நடந்தது என்ன ?
மூக்குத்தி அம்மன் -2 திரைப்படத்தின் பூஜையில் நயன்தாரா நடிகை மீனாவை இன்ஸ்செல்ட் செய்துவிட்டதாக வெளியான சில தகவல்கள் தற்போது கோலிவுட் டவுன்லில் ஹாட் டாப்பிகாக பேசப்பட்டு வருகிறது

நயன்தாரா மீனா சர்ச்சை
மூக்குத்தி அம்மன் -2 திரைப்படத்தின் பூஜையில் நயன்தாரா நடிகை மீனாவை இன்ஸ்செல்ட் செய்துவிட்டதாகவும் ரெஜினினாவின் நடவடிக்கைகள் நயந்தாரவுக்கு சரிவர பிடிக்கவில்லை எனவும் வெளியான சில தகவல்கள் தற்போது கோலிவுட் டவுன்லில் ஹாட் டாப்பிகாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி நயன்தாரா ரசிகர்களையும் முகம் சுளிக்க செய்துள்ளது.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தயாரித்து இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். 2020- ல் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது. ஊர்வசி, ஆர்.ஜெ. பாலாஜி நடிப்பும் ரசிகர்களை ரசிக்க வைத்ததாக இருந்தது.
தற்போது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சிமேக்ஸ், ஐ.வி. ஓய் என்டர்டெய்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் -2 பாகம் உருவாகிறது. இதிலும் நயன்தாரா நடிக்கிறார். மார்ச்-15ம் தேதி முதல் ஹூட்டிங் தொடங்கியது.
சில வாரங்கலூக்கு முன்பு பிரசாத் லேபில் பிரம்மாண்ட் செட் அமைகக்ப்பட்டு படத்திற்கான பூஜை நடைப்பெற்றது. இதில் குஷ்பு, மீனா, ரெஜினா கெசென்ரா நயன்தாரா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் நயன்தாரா மீனாவை இன்சல்ட் செய்யும் விதமாக முகம் கொடுத்து கூட சரியாக பேசவில்லை என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. மேலும் நயன்தாரா பூஜைக்கு வருவதற்கு முன்பே பட குழுவினர்கள் ரெஜினாவை முதலில் மேடை ஏற்றி அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் அந்த விழாவில் அவருக்கு மட்டும் தான் முன்னுரிமை முதல் மரியாதை செய்வார்கள் என்று நயன்தாரா என்னிய நிலையில் அங்கு மீனா, குஷ்பூ, ரெஜினா என எல்லா நடிகைகளுக்கும் பொன்னாடை போர்த்தியது நயந்தாரா வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என படக் குழுவினர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மேடையில் குஷ்பூ ரெஜினாவிடம் செல்பி எடுக்க சொல்லி போனை கொடுத்து இருக்கிறார். இதுவும் நயன்தாராவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மூக்குத்தி அம்மன் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கும் நிலையில் அதிக முக்கியத்துவம் கொடுக்காதது ஏமாற்றத்தை கொடுத்ததால் தான் கூட அவருடைய முகம் மூக்குத்தி அம்மன் பட பூஜையில் வாடிப்போய் இருந்திருக்கலம் என பேசப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

