Arrear exam: மீண்டும் அரியர் தேர்வு எழுத வாய்ப்பு வேணும் - எம்எல்ஏ கோரிக்கை
ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவ தேர்வுகளின் பொழுது தேர்வு எழுத சிறப்பு அனுமதி (GRACE CHANCE) வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேர விவாதத்தில் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக்கல்வி முடித்த நிறைய மாணவர்கள் நிலுவை பாடங்கள் அதாவது ARREARS வைத்துள்ளனர். அவர்களுக்காக வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு தமிழகத்தை போல சிறப்பு வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
புதுச்சேரியின் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட்டில், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் இலக்காகக் கொண்ட பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை (மார்ச் 12, 2025) தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பூஜ்ய நேர விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் அவர்கள் பேசியது பற்றி பார்ப்போம். தொழில்நுட்ப கல்வி, பலவகை தொழில்நுட்பக்கல்வி, பட்டயப்படிப்பு ஆகியவற்றில் தேர்வு எழுதுவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை முடித்து அந்த வாய்ப்புகளில் தேர்ச்சி பெறாமல் நிலுவை பாடங்கள் (ARREARS) வைத்துள்ளவர்களுக்கு தமிழகத்தில் ஒரு அரசாணை வெளியிட்டு வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவ தேர்வுகளின் பொழுது தேர்வு எழுத சிறப்பு அனுமதி (GRACE CHANCE) வழங்கப்பட்டுள்ளது.
இதே போல நமது புதுச்சேரியிலும் வழங்க வேண்டுமென முதல்வர் அவர்களையும் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்று சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் கூறியுள்ளார். பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக்கல்வி முடித்த நிறைய மாணவர்கள் நிலுவை பாடங்கள் அதாவது ARREARS வைத்துள்ளனர். அவர்களுக்காக வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு இதுபோல சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்களும் அவர்களின் குடும்பத்தின் பட்டப்படிப்பு கனவும் நிறைவேறும்.
தமிழகத்தில் வெளியிட்டுள்ள அரசாணையை அடிப்படையாக கொண்டு புதுச்சேரி மாநிலத்திலும் இது போன்ற ஒரு முறை வாய்ப்பு (GRACE CHANCE) வழங்க வேண்டுமென மாணவர்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

