டேக்வாண்டோவில் தங்கம் வென்று சாதனை படைத்த சத்யராஜின் பேரன் - குவியும் வாழ்த்து!
நடிகர் சத்யராஜின் பேரனும், சிபிராஜின் மகனுமான தீரன், டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகிறது. சமீப காலமாக சில நடிகர்கள் தங்களின் குழந்தைகளை நடிப்பை விட்டு கொஞ்சம் விளக்கி அவர்களை விளையாட்டு துறையில் கவனம் செலுத்த ஊக்கப்படுத்துகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா சிவக்குமாரின் மகன் தேவ் கராத்தேயிலும், மாதவனின் மகன் நீச்சல் போட்டியிலும் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தனர்.
இன்னும் சில பிரபலங்கள் தங்களின் பிள்ளைகளை வேறு துறையில் படிக்க வைத்துள்ளனர். நடிகை சரண்யா பொன்வண்ணனின் மகள்கள் இருவருமே மருத்துவராக உள்ளார். கேஎஸ் ரவிக்குமாரின் மகள்கள் சினிமா பக்கமே வரவில்லை வெவ்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள், காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக உள்ளார். நளினி - ராமராஜன் மகன் ஆடிட்டராக உள்ளார்.
அந்த வரிசையில் நடிகர் சத்யராஜின் பேரனும், சிபிராஜின் மகனுமான தீரன் டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் கொல்கத்தாவில் 8ஆவது இந்திய டி.ஐ.ஏ. ஓபன் இண்டர் டேக்வாண்டோ சாம்பியியன்ஷிப் 2024 (8th India T.I.A. Open Inter Tkdw Championships 2024) போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற சத்யராஜின் பேரன் தீரன் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் என்று 2 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.
நடிகர் சத்யராஜினி மகன் சிபிராஜ். சத்யராஜைப் போன்று சிபிராஜ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார். ஆனால், பெரியளவில் ஹிட் கொடுக்க முடியவில்லை. அவருக்கான சரியான கதை அமையவில்லை. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிபிராஜ் மற்றும் ரேவதி தம்பதியினருக்கு இப்போது 2 மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் தான் தீரன். தற்போது டேக்வாண்டோவில் தங்க பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.