தொகுதி மறுவரையறு கூட்டம் இல்லை, ஊழலை மறைப்பதற்கான கூட்டம் - தமிழிசை விமர்சனம்
ஊழலை மறைப்பதற்காக கூட்டணி கட்சிகளை கூட்டி தமிழக முதலமைச்சர் நாடகம் நடத்துகிறார் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்.

கருப்பு கொடி ஏந்தி தமிழிசை எதிர்ப்பு
சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கருப்புக்கொடி ஏந்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ,
தமிழக முதலமைச்சருக்கு எங்களது கண்டனத்தை வலிமையாக இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் மூலம் பதிவு செய்கிறோம். திமுகவிற்கு கண்டனத்தை தெரிவிக்க கருப்பு கொடியும் தமிழகத்தை காப்பாற்ற தாமரைக் கொடியும் ஏந்தியுள்ளோம்.
தமிழக அரசு தோல்வி
முதலமைச்சரின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். பள்ளிகளில் கட்டிடங்கள் சரியாக கட்டப்படவில்லை. பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக்-ஐ நீக்குவோம் என கூறினார்கள். அதனையும் செய்யவில்லை.
ஆனால் அமித்ஷா தொகுதி மறு வரையறையினால் தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று கூறினார். தமிழக முதல்வர் தங்களது தோல்வியை மறைப்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டுகிறார் என குற்றம் சாட்டிய அவர்,
தமிழ்நாட்டில் விதவைகள் அதிகமாக உள்ளார்கள் என கனிமொழி கூறினார். அதற்கு என்ன அர்த்தம் ? டாஸ்மாக்-ஐ ஒழிப்போம் என கூறினார்கள். ஆனால் இன்று அது என்ன ஆச்சு என கேள்வி எழுப்பினார். இந்த அரசு இல்லாத ஒரு அறிவிப்பை கையில் எடுத்து உள்ளனர்.
காவிரி பிரச்சனை தீர்ந்து விட்டதா மேகதாது அணை கட்டுவோம் என கூறினீர்கள். என்றாவது கர்நாடகாவிற்கு நீங்கள் குழு அனுப்பி இருக்கிறீர்களா ? அல்லது இது தொடர்பாக தமிழகத்தில் ஏதேனும் கூட்டத்தை கூட்டி உள்ளீர்களா ? என கேள்வி எழுப்பிய தமிழிசை ,
முல்லைப் பெரியார் பிரச்சனை இன்று அளவும் தீர்க்கப்படத் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு தொகுதி மறு வரையறை , அறிவிக்காத ஒன்று இதற்கு இப்பொழுது முக்கியத்துவம் அளிக்கும் நீங்கள் ஏன் காவிரி பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. மறுவரையறை கூட்டம் இல்லை, ஊழலை மறைப்பதற்கான கூட்டம் இது என தமிழிசை கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

