மேலும் அறிய

தாமரை மலர்ந்தால் தானே நான் டென்சன் ஆகனும் - தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

தாமரை எங்காவது மலர்ந்தால் தானே நான் டென்ஷனாக வேண்டும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகாவை கூண்டோடு ஏறகட்டிவிட்டோம், என தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பந்தக்காலை ஊன்றினார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது ; 

திமுக ஆட்சிக்குப் பிறகு இதுவரை ஆண்டு கணக்கில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிவுற்று  திருப்பணிகள் முடிவுறாத திருக்கோவில்களுக்கு தெப்ப குளங்களை சீரமைப்பது, புதிய திருத்தேர்தல் வடிவமைத்தல், பழைய தேர்களை புதுப்பித்தல்,  வணிக வளாகங்கள்,  பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்ற கொட்டகை கட்டடம், அதே போல பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் 13 வகையான திருவிழாக்களுக்கு கூடுதலான அடிப்படை தேவைகள் இலட்சக்கணக்கான மக்களுக்கு கூடுகின்ற திருவிழாக்களில் முன்கூட்டியே கூடுகின்ற பக்தர்களுக்கு ஏற்ப போக்குவரத்து வசதி , மருத்துவ வசதி, தங்குமிடம் வசதி, கழிப்பிட வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் பல்வேறு சிறப்பு அம்சங்களோடு திருவிழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆய்வுக் கூட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தீபத்திருவிழா அடுத்த மாதம் 13 என்றாலும் முன்கூட்டியே முதல்வரின் உத்தரவின் பேரில் துணை முதலமைச்சர் அவர்கள் தீப திருவிழா ஏற்பாடுகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் அமைச்சர் வேலு அவர்களும் துறையின் சார்பில் நானும் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம்.

சூரசம்ஹாரம் - 8 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

திருவிழாக்களுக்கு முன்பாகவே தேவைப்படுகின்ற அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்வதற்கு ஒருங்கிணைந்த அனைத்து துறை சார்ந்த கூட்டம் தேவை என்பதால் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று திருசெந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அனுமதியோடு திருச்செந்தூரில் நான் பங்கேற்று இருந்தேன் 8 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைத்து அடிப்படை வசதிகளும் எப்படி இருந்தது என நிகழ்ச்சி  முடிந்ததும் துறை அமைச்சர் நானே விசாரித்தேன்.  கடந்த மூன்று ஆண்டுகளாக மேலும் சிறப்பான வசதியை செய்து கொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்தனர். முதல்வருக்கும் நன்றி தெரிவித்தது என்னால் கேட்க முடிந்தது. இப்படியான மகிழ்ச்சி மக்கள் இடத்தில் இருப்பது எங்கள் பணிகளை சிறப்பாக்கும் அது எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்த கங்காதரேசுவரர் கோவில் 2008 ஆம் ஆண்டு முதலில் குடமுழுக்கு நடைபெற்றது.  இந்த திருக்கோயில் என்பது 900 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த திருக்கோவில் இந்த திருக்கோவிலில் சுமார் 4 கோடி 85 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதில் திருக்கோவில்களின் 14 பணிகளுக்கு 2 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

உபயதாரர்கள் நிதியை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 22 திருப்பணிகள் 1.900 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 1.29 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு புன்னுரமைக்கப்பட்டுள்ளது. இந்த திருக்கோவிலுக்கு தேவையான திருப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிய தங்கதேர் ஆறு கோடி ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  திருக்கோவிலில் இருக்கக்கூடிய தங்கதேர் பணிகள் நன்கொடையாளர்கள் துணையோடு திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   ரூபாய் 30 லட்சம் செலவில் தங்கதேருக்கான மரத்தேர் திருப்பணி முடிவுற்றிருக்கிறது.  இந்த திருக்கோவிலுக்கு விழா காலங்களில் பக்தர்கள் உலா வருகின்ற திருத்தேர் என்பது 81 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு விரைவில் வெள்ளோட்டம் விடப்பட இருக்கிறது.  

இந்த ஆட்சிக்கு பிறகு பெரிய கோவில்களில் இதுவரையில் 2265 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது.  வருகின்ற 11 மற்றும் 14 ஆம் நாட்களில் மட்டும் 60 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த கங்காதீஸ்வரர் 21ஆம் தேதி காலை 7:30 மணியிலிருந்து எட்டரை மணிக்குள்ளாக குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  இந்த ஆண்டுக்கு 2500 திருக்கோவில்கள் திருப்பணிகள் நிறைவு போடக்கூடிய ஒரு சூழல் ஏற்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த கோயிலுக்கு உபயதாரர் நிதி 1.90 கோடி அளவில் வரவேற்கப்பட்டிருக்கிறது. இதுவரையில் ஆட்சிக்குப் பிறகு திருக்கோவிலில் உபயதாரர் நிதி கணக்கில் எடுத்துக் கொண்டால் 920 கோடி ரூபாய் அளவிற்கு உபயதாரர் நிதி மற்றும் திருக்கோவில் திருப்பணிக்கு வந்துள்ளது.  இந்த ஆட்சிக்குப் பிறகு இவ்வளவு பெருந்தொகை பக்தர்கள் முழு மனதோடு நம்பிக்கையோடு தங்கள் அளிக்கின்ற நிதி இறைவனுடைய இறை பணிக்கு சென்று சேருகிறது என்ற நம்பிக்கை அடிப்படையில் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து இவ்வளவு தொகையை கொடுத்து வருகிறார்கள். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக தொகை வந்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மென்மேலும் மேம்படுத்தப்படும்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த திருக்கோவில்களின் திருப்பணிகளை முழுமூச்சாக இந்த ஆட்சியின் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

 426 கோடி ரூபாய் செலுவில் 274 திருக்கோவில்கள் குடமுழுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இதுவரையில் 37 திரு கோவில்கள் குடமுழக்கு பணி நிறைவு பெற்றிருக்கிறது.  

திருச்செந்தூரில் தனியார் நிறுவனம் சார்பாக 10 ஆண்டுகளாக திருப்பணிக்காக வைக்கப்பட்ட கோரிக்கை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரியபாளையத்தில் இருக்கிற பவானி அம்மன்  திருக்கோவிலுக்கு பரம்பரை அறங்காவலர்கள் கொண்ட திருக்கோயில் இந்த பரம்பரை அறங்காவலர் 15 ஆண்டுகளாக திருப்பணி செய்வதற்காக அனுமதி கேட்டு அனுமதி மறுக்கப்பட்டு நிலையில் இந்த ஆட்சிக்கு பிறகு திருக்கோவிலுக்கு திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 135 கோடி ரூபாய் மதிப்பில் திருக்கோவில் நிதியிலிருந்து அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனுமதிகள் விரைவாக வழங்குவதால் திருப்பணிக்கான உபயதாரர்கள் அதிகமாக வருகிறார்கள். திருப்பணிகள் வேகமாக நடைபெறுகிறது.  குடமுழுக்கும் வேகம் பெறுகிறது. 

மாநில வல்லுனர் குழுவினால் 10,460 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு அனுமதி அளித்திருக்கிறார்கள்.  இந்த திட்டம் 5,487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோவில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என்றால் முதலில் மண்டல அளவில் அதற்கு அனுமதி வேண்டும், மாநில அளவில் குழுவின் அனுமதி வேண்டும் அதன்பிறகு தொல்லியல் துறையின் அனுமதி வேண்டும்.  இவை எல்லாம் கடந்த காலங்களில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறுவது மிகவும் கடினமான முறையாக இருந்தது. அவையெல்லாம் மாற்றி தற்போது மாதம் ஒருமுறை உயர்மட்ட தொல்லியல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தேறி அதன் வாயிலாக இதுவரை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு வல்லுநர் குழு திருப்பணி ஒப்புதல் அளித்த திருக்கோவில்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. 

திருக்கோவில்கள் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது 7,115. 56 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.  இந்த நிலங்களின் மதிப்பு 6847 கோடி ரூபாயாகும்.  கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் 2000 கோடி அளவிற்கு கூட நிலங்கள் மீட்கப்படாத நிலையில் இந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பை ஒப்பிட்டு பார்க்கும் போது 100 மடங்கு அதிகமான அளவிற்கு உள்ளது

கோயில் நிலங்களை மீட்க வேண்டும் நிலங்களை அளவீடு செய்ய வேண்டும் என்பதற்காக வருவாய் துறையில் இருந்து 38 மாவட்டங்களுக்கு வட்டாட்சியளர்களை பணியமடுத்தப்பட்டிருக்கிறார்கள் அந்த வட்டாட்சியகர்களுக்கு ஆகிர செலவு 10 கோடியே 50 லட்சத்தை துறையை தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது.  ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 995 ஏக்கர் நிலங்கள் இதுவரை அளவிடப்பட்டு அதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 51 திருக்கோவிலில் எல்லை கற்கள் நடப்பட்டுள்ளது. விளம்பரம் பலகை வைக்கப்பட்டுள்ளது.

சிலைகளுக்கு QR கோடு 

சிலை திருட்டு என்பது வெகுவாக குறைந்துள்ளது. 28 கோடி ரூபாய் சிலை கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டதுள்ளது. முதலமைச்சர் தனியாக ஆய்வு கூட்டத்தை நடத்தி விலை மதிப்புடைய சிலைகளுக்கு QR கோடு பொருத்தப்பட்டு காணாமல் போனால் அந்த சிலைகள் எங்கு இருக்கிறது அதை காவல்துறையின் தலைவர் அலுவலகத்தில் இருந்து வரைபடத்தை கண்டுபிடித்து செய்து கொண்டிருக்கிறோம். ஆறு மாத காலத்தில் மீட்கப்பட்ட சிலைகளுக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அந்த திருக்கோவிலுக்கு சொந்தமானது என்று ஆவணங்கள் உடைய சரிபார்ப்பில் நிரூபிக்கப்படும் போது அந்தந்த திருக்கோவிலூருக்கு சிலைகள் வைப்பதற்கு முதலமைச்சர் உத்தரவு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். 

திருவண்ணாமலை தீபத்திற்கு 35 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக பேருந்து நிலையங்கள் என கடந்த காலங்களை காட்டுலும் கூடுதலாக 20% ஏற்பாடுகளை கட்டமைப்புகளை உருவாக்க மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. பணிகள் குறித்து தொடர்ந்து மீண்டும் ஒரு ஆய்வுக் கூட்டத்தை மேற்கொள்ள இருக்கிறோம். 

தாமரை எங்கையாவது மலர்ந்தால் சேகர்பாபுவிற்கு கோபம் வருகிறது என்ற தமிழிசை கேள்விக்கு ;

பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் கூண்டோடு ஓரம் கட்டி விட்டோம். எங்களுக்கு டென்ஷன் இல்லை. நாலு கால் பாய்ச்சலில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த திமுக எட்டு காலு பாய்ச்சலோடு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.  முதலமைச்சர், துணை முதலமைச்சர், மாவட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் குறைகளையும் மக்கள் தேவைகள் நேரடியாக சந்தித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் 200 அல்ல 234 என்ற இலக்கை நோக்கி திமுக பயணத்தைக் மேற்கொண்டு இருக்கிறது.  எங்களுக்கு டென்ஷன் அல்ல எங்களுக்கு எதிர்த்து களத்தில் இருப்பவர்கள் தான் டென்ஷன். 

சிதம்பரம் கோவில் - நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை மேற்கொள்வோம்

சிதம்பரம் கோவிலை பொறுத்த வரைக்கும் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை நாங்கள் கேட்டு மேற்கொள்ள இருக்கிறோம். திருக்கோவிலில் பொருத்தவரைக்கும் சட்டங்கள் என்ன சொல்கிறது ? எந்த திருக்கோவிலாக இருந்தாலும் புகார் பெறப்பட்டால் அதன் மீது விசாரணை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு முழு அதிகாரம் இருக்கிறது.  கனக சபை வருகின்ற மக்களை தடுத்து நிறுத்துவதன் காரணமாக இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு அரசாணை பிறப்பித்தது அந்த அரசாணை எதிர்த்து ஏற்கனவே தடை செய்யக்கூடாது என உத்தரவு பெறப்பட்டது. தீச்சர்களோடு போராட வேண்டிய அவசியம் இல்லை பக்தருக்காக  அவர்களுக்கு அவமரியாதையும் தேவையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றாத சூழ்நிலையில் நிச்சயம் அரசு தலையிட்டும்  நீதிமன்றமும் வரவேற்கும் திருக்கோவில் என்பது பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக தான் ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட தரிசனம் செய்வதற்கு அல்ல பொதுமக்களுக்கு கேடு விளைவிக்குமானால் பொதுமக்கள் உடைய தரிசனத்தில் இடர்பாடுகள் ஏற்பட்டால் இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்கப்படும். 

அனைத்து திருக்கோவில்களிலும் குடமுழுக்கு சமயத்தில் தமிழில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget