மேலும் அறிய

‛இந்து வழிபாடு கேலி கிண்டலை எதிர்க்கிறோம்...’ வேலூர் இப்ராஹிம் பேட்டி!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களை திசைதிருப்புவதற்காக மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக சுமத்தி வருகிறது என  வேலூர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையத் இப்ராஹிம் வருகை புரிந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சையத் இப்ராஹிம் கூறுகையில்: தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி வளர்ச்சிகாக பல முயற்சிகள் எடுத்து வருகிறேன்.



‛இந்து வழிபாடு கேலி கிண்டலை எதிர்க்கிறோம்...’ வேலூர் இப்ராஹிம் பேட்டி!‛இந்து வழிபாடு கேலி கிண்டலை எதிர்க்கிறோம்...’ வேலூர் இப்ராஹிம் பேட்டி!

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சியினை மதவாதகட்சி என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று ஒரு பொய்பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த பிரச்சாரம் வலுவடைந்தால் இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு இடையேயான நல்லினக்கம் கெட்டுவிடும். பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணிசார்பில் மதநல்லிணக்கத்தை முன்னெடுத்து வருகிறோம். அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சாமிகளை சந்தித்து நல்லிணக்க கருத்துக்கள் குறித்து பேசினோம்.


‛இந்து வழிபாடு கேலி கிண்டலை எதிர்க்கிறோம்...’ வேலூர் இப்ராஹிம் பேட்டி!

பாரதிய ஜனதா கட்சி மதம், மொழி, ஜாதி அரசியலை முன்னெடுக்கவில்லை. மக்களுக்கு மத்தியில் சமத்துவத்தை போதிக்க வேண்டுமென்பதுதான் கொள்கை, அனைத்து மக்களின் முன்னேற்றத்தை கொண்டுதான் இந்த தேசம் வலுப்பெற வேண்டும். எந்த மதபாகுபாடும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி கூறிய பிறகும் திமுக அரசு மத்திய அரசை இழிவுபடுத்த வேண்டுமென்ற நோக்கில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக தினந்தோறும் எதாவது அறிக்கைகள் வெளியிடக்கூடிய சக்திகளுக்கு மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மத்திய அரசுக்கு எதிரான பிரிவினவாத, பயங்கரவாத சக்திகள் ஊக்கம்பெற்று இருக்கிறார்கள். அவர்களுடைய பேச்சு மத்திய அரசை இழிவுப்படுத்தும் வகையில் வன்முறையை தூண்டும் வகையில் இருக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழ்நாட்டின் முதல்வர் இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தால் தமிழ்நாடு அமைதிபூங்கா என்ற நிலைமாறி மதக்கலவரத்தை உருவாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 


‛இந்து வழிபாடு கேலி கிண்டலை எதிர்க்கிறோம்...’ வேலூர் இப்ராஹிம் பேட்டி!
‛இந்து வழிபாடு கேலி கிண்டலை எதிர்க்கிறோம்...’ வேலூர் இப்ராஹிம் பேட்டி!

இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்துவது, வழிபாட்டை கிண்டல், கேலி செய்வதை இஸ்லாமியர்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம். இந்து மதத்தை இழிவுப்படுத்துபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் ஆன்மீக பூமி, அமைதி பூமி என்பதை நிலைநிறுத்த முடியும். அரசியல் வாக்கு வங்கிக்காக திமுக அரசு தவறான நடவடிக்கையை மேற்கொள்ளுமே ஆனால் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் மாதந்தோறும் மத்திய அரசு எதிரான கருத்துக்களை எடுத்துக்கூறி மக்களை திசைதிருப்பும் முயற்சியைத்தான் திமுக செய்கிறது. உள்ளாட்சி தேர்தலில் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது காவல்துறையை வைத்து நெருக்கடி கொடுப்பது போன்ற எந்த அச்சுறுத்தலுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். தமிழகத்தை ஆன்மீக பூமியாக இருக்க பாடுபடுவோம் என்றார். இந்நிகழ்வில்  அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதானந்த ஆனந்தா, மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், நகரத் தலைவர் கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Embed widget