தவெக... தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து
தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழா; தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து வழங்கப்பட்டது.
சென்னை பனையூர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் விஜய். சிவப்பு, மஞ்சள் பின்னணியில் இரண்டு போர் யானைகள் கொண்டும் நடுவில் வாகைமலர் கொண்ட லோகோவை கொண்டுள்ளது. பனையூர் அலுவலகத்தில் கட்சி கொடியை கம்பத்தில் ஏற்றி வைத்தார் விஜய். பின்னர் த.வெ.க. கொடி பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடல் தமிழன் கொடி பறக்குது என்று தொடங்குகிறது. அதுமட்டுமல்ல, இதுநாள் வரை நமக்காக உழைத்தோம். இனி, தமிழகத்திற்காக உழைப்போம் என்ற அறை கூவலுடன் கட்சி மாநாட்டிற்குத் தயாராகுங்கள் என தவெக தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் விஜய்.
- Vijay: க்யூட்ல! கிருஷ்ணர் வேடம் போட்ட தளபதி விஜய்! "புல்லாங்குழல் ஊதும் சின்னக்கண்ணன்"!
Greatest Of All Time எனும் GOAT திரைப்படத்துடன் சினிமாவிற்கு முழுக்குப் போடும் விஜய், அரசியல் பாலகனாக இருக்கிறார். சினிமாவைப் போல், படிப்படியாக நீண்ட காலம் போராடி ஜெயித்த உச்ச நட்சத்திரம் ஆகப்போகிறாரா அல்லது தம்முடைய நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்த வந்த வேகத்திலேயே கோட்டையைப் பிடிக்கப்போகிறாரா அல்லது நானும் ஒரு ஓட்டப்பந்தய வீரன் என அரசியல் பந்தயத்தில் ஓடிக் கொண்டே இருக்கப்போகிறாரா என்பதுதான் தற்போது பலரின் மனதில் பேசப்படும் கேள்வி. ஆனாலும் மறுபக்கம் விஜயின் ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு செயல்பட்டு வருகின்றனர். மதுரையில் 50 அடி உயர கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.