மேலும் அறிய

Azhagiri Politics: மீண்டும் அழகிரி.. மகனால் கிடைத்த ரீ என்ட்ரி.. அதிரும் அரசியல் களம்...

மகன் துரையின் சிபாரிசு மூலம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி, முழு நேர அரசியலுக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக, மகனுக்கு அப்பா சிபாரிசு செய்வதை பார்த்துள்ளோம். ஆனால், தனது மகனின் சிபாரிசு மூலம், மு.க. அழகிரி முழு நேர அரசியல் களத்திற்குள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசமான உடல்நிலையில் இருந்து மீண்டுவந்த துரை தயாநிதி

சமீபத்தில், மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, மிக மோசமான உடல்நிலை பாதிப்புக்குள்ளானது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதனால், அழகிரி மட்டுமல்லாமல், அவரது தம்பியான ஸ்டாலினும் மிகவும் மன வேதனைக்கு உள்ளாகியிருந்தனர். மருத்துவமனைக்கே சென்ற மு.க. ஸ்டாலின், அழகிரிக்கு ஆறுதலும், தைரியமும் சொல்லி அவரை தேற்றினார். அதோடு நிறுத்தாமல், நீண்ட நாள் ஐசியு-வில் இருந்த துரை, மிகவும் மோசமான நிலைமைக்குப் போய், ஒருவழியாக தேறிய நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.

துரை தயாநிதியை மீட்க உதவிய நெப்போலியன்

திமுகவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கியதோடு, எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய அமைச்சர் என பதவிகளை விகத்தவர் நடிகர் நெப்போலியன். இவர், அரசியல் மற்றும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, தன் மகனுக்காக அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டது அனைவரும் அறிந்ததே.

இந்த சூழலில், துரை தயாநிதியின் உடல்நிலை குறித்தும், அவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக வருவது பற்றியும் நெப்போலியனிடம் அழகிரிய பேசியுள்ளார். அதை கேட்ட உடனேயே, நீங்கள் கவலைப்படாதீர்கள், அவரை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். நெப்போலின். இதையடுத்து, அமெரிக்காவிற்கு துரையை அழைத்துச் சென்ற அழகிரி, அங்கேயே தங்கி மகனை பார்த்துக்கொண்டார். 6 மாதங்களில் மகனின் உடல்நிலை நன்றாக தேறியது. இதையடுத்து, சமீபத்தி சென்னை வந்த அழகிரி, ஸ்டாலினின் அழைப்பின் பேரில், அவரை சென்று சந்தித்தார்.

அழகிரிக்கு மகனால் கிடைத்த அரசியல் ரீ என்ட்ரி

முன்னதாக, துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரிடம் பேசியுள்ளார். அப்போது, தான் நன்றாக குணமாகிவிட்டதாக தெரிவித்த துரை தயாநிதி, தன் தந்தை அழகிரி குறித்தே ஸ்டாலினிடம் அதிகம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, அரசியலில் ஈடுபடாததால், தந்தை அழகிரி தனித்து விடப்பட்டதாக உணர்வதாக, துரை ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். மேலும், தான் நன்றாக குணமாகிவிட்டதால், தன் தந்தையை அழைத்து பேசுமாறும், அவரது தனிமையை போக்குமாறும் ஸ்டாலினிடம் அவர் கூறியுள்ளார். அதன் விளைவாகவே, ஸ்டாலின் அழகிரியை அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளதால், அழகிரி முழு நேர அரசியலுக்கு வருகிறாரா என் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2026-ல் சட்டமன்ற தேர்தல் வேறு வருவதால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலம் வாய்ந்தவராக கருதப்படும் அழகிரி, திமுகவிற்கு பலம் சேர்ப்பார் என கருதப்படுவதால், ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

10 லட்சம் பேர், மாநாட்டால் குலுங்கிய மாநிலம்.. கணிப்புகள் கனவாக, தேர்தலில் படுதோல்வியுடன் ஓட்டம்..
10 லட்சம் பேர், மாநாட்டால் குலுங்கிய மாநிலம்.. கணிப்புகள் கனவாக, தேர்தலில் படுதோல்வியுடன் ஓட்டம்..
VP Jagdeep Dhankhar:  ஜெகதீப் தன்கரின் இருப்பிடம் தெரிந்தது? ராஜினாமா சர்ச்சை.. எங்கே? என்ன செய்கிறார்?
VP Jagdeep Dhankhar: ஜெகதீப் தன்கரின் இருப்பிடம் தெரிந்தது? ராஜினாமா சர்ச்சை.. எங்கே? என்ன செய்கிறார்?
செங்கல்பட்டு, தாம்பரத்தில் விடிய விடிய மழை: வெள்ளத்தில் தத்தளித்த சாலைகள்! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
செங்கல்பட்டு, தாம்பரத்தில் விடிய விடிய மழை: வெள்ளத்தில் தத்தளித்த சாலைகள்! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
VIJAY Vs Udhay: விஜய் WFH அரசியல்வாதின்னா.. அப்ப உதயநிதி யாரு? ஆக்டிவ் பாலிடிக்ஸ் எங்கே? தவெக அட்டாக்
VIJAY Vs Udhay: விஜய் WFH அரசியல்வாதின்னா.. அப்ப உதயநிதி யாரு? ஆக்டிவ் பாலிடிக்ஸ் எங்கே? தவெக அட்டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI
ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 லட்சம் பேர், மாநாட்டால் குலுங்கிய மாநிலம்.. கணிப்புகள் கனவாக, தேர்தலில் படுதோல்வியுடன் ஓட்டம்..
10 லட்சம் பேர், மாநாட்டால் குலுங்கிய மாநிலம்.. கணிப்புகள் கனவாக, தேர்தலில் படுதோல்வியுடன் ஓட்டம்..
VP Jagdeep Dhankhar:  ஜெகதீப் தன்கரின் இருப்பிடம் தெரிந்தது? ராஜினாமா சர்ச்சை.. எங்கே? என்ன செய்கிறார்?
VP Jagdeep Dhankhar: ஜெகதீப் தன்கரின் இருப்பிடம் தெரிந்தது? ராஜினாமா சர்ச்சை.. எங்கே? என்ன செய்கிறார்?
செங்கல்பட்டு, தாம்பரத்தில் விடிய விடிய மழை: வெள்ளத்தில் தத்தளித்த சாலைகள்! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
செங்கல்பட்டு, தாம்பரத்தில் விடிய விடிய மழை: வெள்ளத்தில் தத்தளித்த சாலைகள்! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
VIJAY Vs Udhay: விஜய் WFH அரசியல்வாதின்னா.. அப்ப உதயநிதி யாரு? ஆக்டிவ் பாலிடிக்ஸ் எங்கே? தவெக அட்டாக்
VIJAY Vs Udhay: விஜய் WFH அரசியல்வாதின்னா.. அப்ப உதயநிதி யாரு? ஆக்டிவ் பாலிடிக்ஸ் எங்கே? தவெக அட்டாக்
மதிமுக, விசிக-வுக்கும் திமுக பணம் கொடுத்தாங்க.. முத்தரசனால் அப்செட்டில் கூட்டணி தலைவர்கள்
மதிமுக, விசிக-வுக்கும் திமுக பணம் கொடுத்தாங்க.. முத்தரசனால் அப்செட்டில் கூட்டணி தலைவர்கள்
Tamilnadu Roundup 23.05.2025: தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. ராகுல்காந்தி யாத்திரையில் முதல்வர் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup 23.05.2025: தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. ராகுல்காந்தி யாத்திரையில் முதல்வர் - 10 மணி சம்பவங்கள்
Fuel Efficient Cars: கம்மி பட்ஜெட் - மைலேஜில் மிரட்டும் பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் கார்கள் - 28 கி.மீ.., 5 ஸ்டார் ரேட்டிங்
Fuel Efficient Cars: கம்மி பட்ஜெட் - மைலேஜில் மிரட்டும் பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் கார்கள் - 28 கி.மீ.., 5 ஸ்டார் ரேட்டிங்
Honda Activa 6G: 60 கி.மீட்டர் மைலேஜ் தருது.. ஹோண்டா ஆக்டிவா 6ஜி விலை என்ன? ஸ்பெஷல் என்ன?
Honda Activa 6G: 60 கி.மீட்டர் மைலேஜ் தருது.. ஹோண்டா ஆக்டிவா 6ஜி விலை என்ன? ஸ்பெஷல் என்ன?
Embed widget