சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - தேனி நீதிமன்றம் தீர்ப்பு
வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரம் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகியுள்ளார். பின்னர் அந்த சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக அவருக்கு முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.
Actor Kavin: ‘டாடா’ நாயகன் கவினுக்கு விரைவில் திருமணம்.... பொண்ணு யாருன்னு தெரியுமா?
வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது தாயாரிடம் கூறினார். சிறுமியின் தாயார் இதுதொடர்பாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
திருச்சியையே நடுநடுங்க வைத்த வழக்கு: 8 பேரை கொன்று புதைத்த நபர்; வரும் 7ம் தேதி தீர்ப்பு
Anikha Surendran: தனுஷ் உடன் இரண்டாம் முறை கூட்டணி... 'டி50' திரைப்படத்தில் இணைந்த இளம் நாயகி அனிகா!
மேலும் இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் குருவராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முருகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட முருகனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்