வல்லநாடு பாலம் சீரமைப்பு பணியை நீதிமன்றம் கண்காணிக்கும் - முறைகேடு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து
பலமிழந்துள்ள பாலங்களை அகற்றிவிட்டு, தரமான புதிய பாலங்கள் கட்டவும், சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என வழக்கு
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை - தூத்துக்குடி இடையிலான தேசிய நெடுஞ்சாலை இடையில் தாமிரபரணி ஆறு கடக்கிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இரண்டு தடத்திலும் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலம் கடந்த 2012ல் திறக்கப்பட்டது. 100 ஆண்டுகள் உத்தரவாதம் அளித்த நிலையில் 2017ல் நெல்லை - தூத்துக்குடி செல்லும் பாலத்தில் 10 அடி நீளத்திற்கு கான்கிரீட் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு ஓட்டை விழுந்தது.
பாலம் பலமிழந்துள்ளதால் எந்தநேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி-நெல்லை செல்லும் பாலத்தில் ஓட்டை விழுந்தன. பாலம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது. தரமற்ற பொருட்களைக் கொண்டு பாலங்களை கட்டியுள்ளனர். எனவே, பலமிழந்துள்ள பாலங்களை அகற்றிவிட்டு, தரமான புதிய பாலங்கள் கட்டவும், சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
கைத்தறி சேலைகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரி சேலத்தில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையம் தரப்பில்," 21.427 கோடி மதிப்பில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கான பரிந்துரையை டில்லி என்.எச்.ஏ.ஐ தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ள நிலையில், டிசம்பர் 25ஆம் தேதிக்குள்ளாக ஒப்புதல் வழங்கப்பட்டுவிடும். ஜனவரி 25ஆம் தேதிக்குள் பணிகளுக்கான டெண்டர் விடும் பணிகளும் நிறைவடைந்து விடும்" என தெரிவிக்கப்பட்டது.இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாலம் சீரமைப்புப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என குறிப்பிட்டு, அது தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தருமபுரி: கிணற்றில் குளிக்கும் போது மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு