TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
TN Agri Budget 2025 Sugarcane: கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்காக தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் 297 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Agri Budget 2025 Sugarcane: கரும்பு விவசாய மேம்பாட்டிற்காக 10.63 கோடி ரூபாய்பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு:
பட்ஜெட் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், 2024-25 அறுவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு, ஒன்றிய அரசல் நியமிக்கப்பட்டுள்ள ஆதார விலைக்கு மேல் டன் ஒன்றுக்கு 349 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3500 ரூபாய் வழங்கப்பட்டு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர். இதற்காக 297 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #TNBudget2025 | #TamilnaduLeads | #TNAgricultureBudget | #TNAgriBudget2025 |@CMOTamilnadu @mkstalin@Udhaystalin @MRKPanneer @mp_saminathan @doa_tn pic.twitter.com/3aOjsKWADV
— TN DIPR (@TNDIPRNEWS) March 15, 2025
கரும்பு விவசாய மேம்பாட்டுத்தொகை:
விதைகள் தொடங்கி அறுவடை என மொத்தமாக கரும்பு சாகுபடி மேம்பாட்டிற்காக 10.63 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பட்ஜெட் உரையில் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தங்களின் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையிலும் கூட, அதனை நிறைவேற்றாதது விவசாயிகளுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.





















