அனைவருக்குமான மாற்று மருந்து.. மக்களின் நம்பிக்கையை பெற்ற பதஞ்சலி!
பதஞ்சலியின் தயாரிப்புகள், பாரம்பரிய மருந்தை நவீன வாழ்க்கை முறைகளுடன் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான சிகிச்சை முறையை வழங்குகின்றன.

பாபா ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவ முறையில் தனது இருப்பை விரிவுபடுத்தி, மாற்று மருத்துவத் துறையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பதஞ்சலி நிறுவனத்தின் மூலம், பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆயுர்வேத மருத்துவ முறையை மாற்றியமைத்து, இயற்கை வைத்தியம் மூலம் நம்பகமான மாற்றை வழங்கியுள்ளனர்.
அனைத்து வயதினருக்குமான மாற்று மருந்து:
பதஞ்சலியின் தயாரிப்புகள் செயற்கை ரசாயனங்களைத் தவிர்த்து, இயற்கை மற்றும் கரிம பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக இது ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் தாவர அடிப்படையிலான கூறுகளை நம்பியுள்ளது.
பதஞ்சலியின் தயாரிப்புகள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு, ஆஸ்துமா, மூட்டுவலி, உடல் பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களிலிருந்து விடுபட உதவியுள்ளன.
பண்டைய ஆயுர்வேத மரபுகளை புதுப்பிக்க பாடுபட்டதால் பதஞ்சலி நிறுவனம் இந்த சாதனையை படைத்துள்ளது. ஆயுர்வேதம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவின் சமநிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாகும்.
மக்களின் நம்பிக்கையை பெற்ற பதஞ்சலி:
பதஞ்சலியின் தயாரிப்புகள், பாரம்பரிய மருந்தை நவீன வாழ்க்கை முறைகளுடன் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான சிகிச்சை முறையை வழங்குகின்றன. தனது தயாரிப்புகளின் தரம் மற்றும் செயல்திறன் மூலம் வலுவான நுகர்வோர் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது பதஞ்சலி. உலகின் மிகப்பெரிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
பரவலாக கிடைக்கும் தன்மை, குறைந்த விலை ஆகியவை பதஞ்சலி நிறுவனத்தை இந்தியாவின் ஒவ்வொரு வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளது. அதே நேரத்தில் நேர்மறையான நுகர்வோர் அனுபவங்களும் கருத்துகளும் இதை நம்பகமான பிராண்டாக மாற்றியுள்ளன.
பதஞ்சலி நிறுவனம் வழங்கும் தயாரிப்புகளில் ஆயுர்வேத மருந்துகள், சுகாதாரம், தனிப்பட்ட பராமரிப்பு, மூலிகை மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் ஆகியவை அடங்கும். பல்வேறு உடல்நலக் கவலைகளுக்கான பரந்த அளவிலான தீர்வுகள், அனைத்து வயதினருக்கும் ஏற்ற தேர்வாக பதஞ்சலியை உருவெடுக்க செய்துள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை அல்ல. மருத்துவம் அல்லது பொது சுகாதார காரணங்களுக்காக, சிகிச்சைக்காக நீங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தின் தயாரிப்பைப் பயன்படுத்தினால், உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநர்களின் ஆலோசனையைப் பெறவும்)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

