Ratchasan Combo : ராட்ச்சஸன் இயக்குநரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு...விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் மமிதா
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம் படத்தில் பிரேமலு பட நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடிக்க இருக்கிறார்

ராட்ச்சஸன் காம்போ
முண்டாசுபட்டி படத்தின் மூலம் இயக்குநராக முத்திரை பதித்தவர் ராம்குமார். நாளைய இயக்குநரில் தான் எடுத்த குறும்படத்தை முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வெற்றிக்கண்டார். நகைச்சுவையில் கலக்கிய இவர் தனது இரண்டாவது படத்தையும் விஷ்ணு விஷாலை வைத்து இயக்கினார். இந்த முறை முதல் படத்திற்கு நேரெதிராக சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான ரட்ச்சஸன் படத்தை இயக்கி மிரள வைத்தார். சைக்கோ த்ரில்லர் படம் என்றாலே பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது ராட்ச்சஸன் தான். அந்த வகையில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது ராம்குமார் விஷ்ணு விஷால் கூட்டணி. இந்த முறையும் முந்தைய இரு படங்களை விட வித்தியாசமான ஒரு கதையுடன் வந்துள்ளார்கள்.
விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம்
Elated to present you all 'IRANDU VAANAM' from your beloved combo of Vishnu Vishal & director Ramkumar after Mundasupatti & Ratsasan.Starring the talented & the sensational Mamitha Baiju💚
— Sathya Jyothi Films (@SathyaJyothi) March 15, 2025
A Dhibu Ninan Thomas Musical 🎶@TheVishnuVishal @_mamithabaiju @dir_ramkumar… pic.twitter.com/GN4X4SJz1r
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு 'இரண்டு வானம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரேமலு படத்தின் மூலம் பரவலாக கவனமீர்த்த மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். சித்தா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைக்கிறார். இரண்டு வானம் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபேண்டஸி காதல் கதையாக இந்த படம் இருக்கலாம் என போஸ்டரின் மூலம் தெரிய வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

