Zee Tamil: ஜீ தமிழ் ரசிகர்களா நீங்கள்? சீரியல்கள் நேரம் மாத்திட்டாங்க - இ்னி எப்போ?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரயல்கள் ஒளிபரப்பாக உள்ள நிலையில், சீரியல்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
திங்கள் முதல் ராமன் தேடிய சீதை:
கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டிமேளம் என இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில், இந்த சீரியலின் நேரத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். மதியவேளையில் மனசெல்லாம், இரவு வேளையில் கெட்டிமேளம் போன்ற சீரியல்கள் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் வரும் திங்கள் முதல் ராமன் தேடிய சீதை என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
சீரியல்கள் நேரம்:
கன்னடத்தில் வெற்றி பெற்ற சீதா ராமன் என்ற சீரியலின் டப்பிங் சீரியலாக இது ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் சனி வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் இதுவரை 2:30 மணிக்கு ஒளிபரப்பாக வந்த மனசெல்லாம் சீரியல் இனி 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் நானே வருவேன் சீரியல் இனி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீதை வாழ்வில் ராமன்:
பிறப்பிலேயே சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் தனியாளாக வாழ்ந்து வரும் சீதையின் வாழ்க்கையில் ராமனின் வருகை எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது? ராமனின் வருகையால் சீதையின் வாழ்க்கை வண்ணமயமாகுமா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.
கன்னடத்தில் பலரின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்து வெற்றி பெற்ற சீரியலின் தமிழ் டப்பிங்கான ராமன் தேடிய சீதை சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

