சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவது எப்போது? நாளை எண்ட்ரி கொடுக்கும் புதிய விண்வெளி வீரர்கள்.!
Sunita Williams: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்டானது நாளை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைய உள்ள நிலையில், சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவது உறுதியாகியுள்ளது.

சுனிதா வில்லியம்சை பூமிக்கு அனுப்புவதற்காக, மாற்று விண்வெளி வீரர்கள் சென்றுள்ள விண்கலமானது நாளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமி திரும்புவார் என்பது குறித்தான தகவலை நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவது எப்போது?
சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்து வருவதற்காக, மாற்று வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு நேற்று புறப்பட்டனர். அதற்காக, நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நான்கு விண்வெளி வீரர்கள் கொண்ட மாற்று குழுவினருடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் புறப்பட்டனர். இவர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நாளை நுழைவார்கள். இதையடுத்து, புதிதாக வந்த விண்வெளி வீரர்களிடம், பொறுப்புகளை ஒப்படைக்கும் பணி நடைபெறும். இதனை தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் மார்ச் 19 ஆம் தேதி பூமி திரும்புவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால், மார்ச் 19 ஆம் தேதி பின்பு வருவார்கள், ஆனால் அதற்கு முன்பு திரும்ப வாய்ப்பு இல்லை என நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைவு:
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். பூமியில் இருந்து, சுமார் 400 கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது, சர்வதேச விண்வெளி நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களில் மனிதர்களை அனுப்பி சோதனை செய்யும் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் நோக்கம், முதலில் எட்டு நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலத்தின் என்ஜினில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் இருவரும் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. பயணித்த விண்கலனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக, விண்கலத்தில் திரும்புவது பாதுகாப்பு இல்லை என கருதி தவிர்க்கப்பட்டது. இதை சரிசெய்ய நாசா தொடர்ந்து தீவிர முயற்சி செய்தும், பலனளிக்கவில்லை.
இதையடுத்து, விண்கலத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களை பூமிக்கு அழைத்து வருவில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களை பூமிக்கு கொண்டு வர எலான் மஸ்க்கிற்க்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் மீட்க திட்டமிடப்பட்டது. அதற்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸின் ட்ராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றது.
இதையடுத்து, இருவரும் பிப்ரவரி மாதம் பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று ,மாற்று வீரர்கள் கொண்ட ஸ்பேஸ் நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலம் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணையும். இதையடுத்து, மார்ச் 19 ஆம் தேதிக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா விண்வெளி நிலையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

