விதவிதமாய்.. வித்தியாசமாய்! மதுரை சந்தையைக் கலக்கும் குடுகுடுப்பை இளைஞர்! சங்கதி இதுதான்!
பிளாஸ்டிக் விழிப்புணர்வை குடுகுடுப்பைக் காரர் வேடத்தில் அசத்தும் மதுரை இளைஞர்.

சுற்றுச்சூழல் அமைப்பிலும், மனித வாழ்க்கை முறையிலும் ஏற்படுத்தி இருக்கும் இறுக்கத்தினை தளர்த்துவது போல அறிவியலில் பல்வேறு சீரிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளில் ஒன்று ப்ளாஸ்டிக் பொருட்களின் மக்கும் தன்மையின் கால அளவை குறைப்பதற்கான முயற்சி. பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் விஞ்ஞான அமைப்புகளும் பலதரப்பட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வபோது முன்னேற்றம் குறித்த தகவல்கள் வந்த வண்ணமிருந்தாலும் காத்திரமான பயன்பாட்டுக்கானதாக இல்லாமல் முயற்சியின் முன்னேற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது.
#நெகிழி பைகளை தவிர்த்து துணிபைகளை பயன்படுத்த வேண்டும் என்ற நல் நோக்கத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குடுகுடுப்புக்காரர் வேடமிட்டு சமூக ஆர்வலர் அசோக்குமார் மதுரை உழவர் சந்தை பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.#madurai | @SRajaJourno | @UpdatesMadurai @Act4madurai pic.twitter.com/IfV5G9jxQV
— Arunchinna (@iamarunchinna) June 4, 2022



