‘ஹேப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே’ .... வித்தியாசமாக வாகன ஓட்டிகளிடம் வாழ்த்து கூறிய மதுரை மாநகர போக்குவரத்து போலீஸ்..!
”காவல்துறை உங்கள் நண்பன்” - வித்தியாசமான முறையில் வாகன ஓட்டிகளிடம் நண்பர்கள் தின வாழ்த்து கூறிய மதுரை மாநகரபோக்குவரத்து காவல்துறையினர்.
ஜூலை 30 சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் ஜூலை 30 நண்பர்கள் தினமாக அறிவித்த நிலையில், இந்தியா ஆகஸ்ட் மாதம் முதல் ஞயிற்றுக்கிழமை கொண்டாடி வருகிறது.
2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை சர்வதேச நட்பு தினத்தை அறிவித்தது, இனம், நிறம், பாலினம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பல்வேறு நாடுகளின் மக்களின் வலுவான நட்பை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாகப்பட்டது.
#madurai | "காவல்துறை உங்கள் நண்பன்" வித்தியாசமான முறையில் வாகன ஓட்டிகளிடம் நண்பர்கள் தின வாழ்த்து கூறிய மதுரை மாநகரபோக்குவரத்து காவல்துறையினர்.#மதுரை | #போலீஸ் | #FriendshipDay2022
— Arunchinna (@iamarunchinna) August 7, 2022
| #Friends | @Ajithbala1222
| @ManiTamilMP @thangadurai887 | @UpdatesMadurai @AviationMadurai pic.twitter.com/ejfCtcn1n7
சர்வதேச நண்பர்கள் தினம் தோற்றம்:
முதன்முதலில் 1958-ல் கொண்டாடப்பட்டது, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2011 இல் சர்வதேச நண்பர்கள் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்