Cheteshwar Pujara: தோனி தலைமையில் களமிறங்கியது... மறக்க முடியாத தருணம்”ஓய்வுக்கு பின் மனம் திறந்து பேசிய புஜாரா... முழு வீடியோ இதோ
2010 ஆம் ஆண்டு மஹி பாய் தலைமையில் நான் அறிமுகமானபோது, அது எனக்கு ஒரு கனவு நனவாகியது போல இருந்தது, ஏனென்றால் அந்த நேரத்தில் அணியில் பல சிறந்த வீரர்கள் இருந்தனர்.

செதேஷ்வர் புஜாரா தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய கிரிக்கெட்டின் புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வீரராக புஜாரா தனது ஓய்வு குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார். செய்தி நிறுவனமான PTI-யிடம் பேசிய அவர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் போன்ற ஜாம்பவான்களுடன் விளையாடுவது தனக்கு கிடைத்த மரியாதை என்று கூறினார்.
"2010 ஆம் ஆண்டு மஹி பாய் தலைமையில் நான் அறிமுகமானபோது, அது எனக்கு ஒரு கனவு நனவாகியது போல இருந்தது, ஏனென்றால் அந்த நேரத்தில் அணியில் பல சிறந்த வீரர்கள் இருந்தனர். ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, கவுதம் கம்பீர், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் பல ஜாம்பவான்களும் அந்த அணியில் இருந்தனர். ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் போன்ற ஜாம்பவான்களைப் பார்த்து நான் வளர்ந்தேன், எனவே அது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெருமைமிக்க தருணங்களில் ஒன்றாகும்" என்று செதேஷ்வர் புஜாரா தெரிவித்தார்.
VIDEO | India's Test cricket star Cheteshwar Pujara spoke about his debut game and his teammates after announcing his decision to retire from cricket.
— Press Trust of India (@PTI_News) August 24, 2025
He says, "When I made my debut in 2010 under Mahi bhai, it was a dream come moment for me because there were some great players… pic.twitter.com/Cm10jAk73Z
2010 ஆம் ஆண்டு பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் செதேஷ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், புஜாரா 5வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார், அங்கு அவரால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இரண்டாவது இன்னிங்ஸில், அவருக்கு மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது, இந்த முறை அவர் 72 ரன்கள் எடுத்து இந்தியாவின் 7 விக்கெட் வித்தியாச வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.





















