மேலும் அறிய
Advertisement
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
ஒன்பது ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் பயணிகள் கவனத்திற்காக ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக நாளை ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்
மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இன்று (ஜனவரி 9) ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் பணிகள் காலை 10.35 மணி முதல் மாலை 05.35 மணி வரை நடைபெறுகிறது இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட வேண்டிய ஒன்பது ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது.
எந்தெந்த ரயில்கள் மாற்றம் செய்யப்படுகிறது
அதன்படி செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848), நாகர்கோவில் - மும்பை ரயில் (16352), மதுரை - பிகானிர் ரயில் (22631), நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர ரயில் (16321), குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் (16128), கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர ரயில் (16322), ஓகா - ராமேஸ்வரம் ரயில் (16734), மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847), திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை - மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில்கள் மானாமதுரை மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களிலும் மற்ற ரயில்கள் மானாமதுரை ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும்.
ரயில்கள் பகுதியாக ரத்து
ஜனவரி 6 அன்று குஜராத் ஓகாவில் இருந்து புறப்படும் மதுரை ரயில் (09520) விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் ஜனவரி 10 அன்று மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய ஓகா ரயில் (09519) மதுரை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 9 இன்று பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு ரயில்கள் (16731/ 16732) திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
தாமதமாக புறப்படும்.
மதுரை திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஜனவரி 9 இன்று மதுரையிலிருந்து மாலை 05.50 மணிக்கு தாமதமாக புறப்படும். நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் ரயில் ஜனவரி 9 இன்று நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு காலதாமதமாக புறப்படும். திருச்செந்தூர் வாஞ்சி மணியாச்சி ரயில் ஜனவரி 10 அன்று திருச்செந்தூரில் இருந்து மாலை 03.40 மணிக்கு தாமதமாக புறப்படும்.
இதைப் படிக்க மிஸ் பாண்ணாதீங்க பாஸ் - Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
மேலும் செய்திகள் ப்டிக்க இங்கே கிளிக் செய்யவும் - மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion