Watch Video : மாதவிடாய் வலியில் துடித்த ஆண்கள்.. சூப்பரான விழிப்புணர்வு முயற்சி.. இத பாருங்க முதல்ல..
அந்த அனுபவம் குறித்து கூறிய அவர் “இது வலி இல்லை. இது மிகவும் எரிச்சலூட்டும் விதத்தில் வேதனையாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியையும், அசெளகரியத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதனை ஆண்களுக்கும் உணர்த்தும் வகையில் மேலை நாடுகளில் period pain simulator என்னும் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பலரின் கவனத்தை ஈர்த்த நிலையியில் இந்தியாவிலும் சில இடங்களிலில் வைக்கப்பட்டுள்ளது.
பீரியட் பெயின் சைமுலேட்டர்
இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) கொச்சியில் உள்ள லுலு மாலில் பீரியட் பெயின் சிமுலேட்டர் வசதியை அமைத்துள்ளது. மாதவிடாய் காலங்களில் வலி எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள பல ஆண்கள் முன் வந்துள்ளனர். அப்போது அவர்கள் வலியை எதிர்க்கொள்ள முடியாமல் துடித்துள்ளனர். எர்ணாகுளம் எம்.பி ஹிபி ஈடனின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தடைகளை உடைப்பதற்கும் கப் ஆஃப் லைப்பின் ஒரு பகுதியாக #feelthepain நிகழ்வு நடத்தப்பட்டது. மாதவிடாய் வலி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட இந்த புதிய வசதிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் கப் ஆஃப் லைஃப் இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் மாதவிடாய் வலி சைமுலேட்டரை பயன்படுத்திய ஆண்கள் வலியை தாங்க முடியாமல் சத்தமாக அழுவதையும் , துடிப்பதையும் காண முடிந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
ஆண்களின் மாதவிடாய் அனுபவம் :
இந்த கருவியை காங்கிரஸ் எம்.பி ஹிபி ஈடன் ஒருமுறை பயன்படுத்தி பார்த்திருக்கிறார். அந்த அனுபவம் குறித்து கூறிய அவர் “இது வலி இல்லை. இது மிகவும் எரிச்சலூட்டும் விதத்தில் வேதனையாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். அதேபோல இதனை பயன்படுத்திய மற்றொருவர் தனது அனுபவத்தை பகிர்ந்தார் அதில் “ஒரு மனிதனாக நான் என் வாழ்க்கையில் மாதவிடாய் வலியை அனுபவித்ததில்லை. இது எனக்கு மிகவும் வேதனையாகவும், கண் திறக்கும் அனுபவமாகவும் இருந்தது. மாதவிடாய் காலங்களில் பெண்களின் அவல நிலை குறித்து நான் நிறைய அறிந்துகொண்டேன். இந்த அனுபவத்திற்கு பிறகு நான் சென்று மாதவிடாய் வலிகள் பற்றி படித்தேன், சுமார் 84% பெண்கள் இயற்கையாகவே அந்த வலியை அனுபவிப்பது வேதனை “ என்றார்.
View this post on Instagram