பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்த உ.பி. போலீஸ்; தட்டிக்கேட்ட டிடிஇ: வைரலாகும் வீடியோ
காவலர்கள் என்பவர்கள் பொதுமக்களை பல்வேறு பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், சட்டத்தை கடைப்பிடிக்க உதவவும் வேண்டும்.
காவலர்கள் என்பவர்கள் பொதுமக்களை பல்வேறு பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், சட்டத்தை கடைப்பிடிக்க உதவவும் வேண்டும். பெரும்பான்மையான காவலர்கள் அதைச் செய்தாலும், ஒரு சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது. அச்சிலர், தங்கள் பதவியை தேவையற்ற முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். சில போலீஸ்காரர்கள் தங்கள் பதவியை தேவையில்லாமல் பயன்படுத்திக் கொள்வதைக் காட்டும் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.
டிடிஇ (Travel Ticket Examiner) ஒருவருடன் 2 போலீசார் சண்டையிடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், காவல்துறையின் அச்சுறுத்தலுக்குப் பிறகும் TTE எப்படி கடமை தவறாமல் தனது வேலையைத் தொடர்கிறார் என்பது நம் மனதைக் கவர்கிறது
அந்த வீடியோவில், போலீஸ்காரர்கள் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதைக் காணலாம். இதைக் கண்டிக்கும் டிடிஇ யிடம், பிற பயணிகள் முன்னிலையிலேயே அப்போலீசார்சண்டைப்பிடிக்க தொடங்கினர்
அதற்கு"அவரது தந்தைக்கு சொந்தமானதா" என்று காவல்துறையினர் TTE ஐ கேள்வி கேட்க, "நான் என் கடமையைச் செய்கிறேன். இந்த ரயில் உங்கள் தந்தைக்கும் சொந்தமானது அல்ல" என்று TTE தைரியமாக அவர்களை எதிர்த்து பதிலளிப்பதைக் காணலாம். காணொளியில், முன்பதிவு செய்த பயணிகளை போலீஸார் இடத்தைப் பகிர்ந்து கொள்ள மிரட்டுவது போலும் தெரிகிறது.
வைரல் வீடியோவைக் காண:
…तू शेर तो मैं सवा शेर..
— Deepak Kumar Jha (@journalistjha) March 13, 2023
A team of @Uppolice at receiving end from an empowered senior citizen passenger who objected the ‘दादागिरी’ of men in uniform. A regular in trains crossing UP where reserved passengers are intimidated to share space @RailMinIndia pic.twitter.com/ZJUiDicnCv