மச்சினிச்சி மீது ஆசை.. மனைவி மீது காரை ஏற்றி கொன்ற கொடூர கணவன்.. கடைசியில் ஷாக்!
மச்சினிச்சி மீது ஆசைப்பட்டு, கணவர் ஒருவர் தனது மனைவி மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார். தனது நண்பரின் உதவியை இதற்காக அவர் நாடியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் தனது மச்சினிச்சி மீது ஆசைப்பட்டு, மனைவி மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார் அவரது கணவர். தனது நண்பரின் உதவியை இதற்காக அவர் நாடியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யில் பரபரப்பு சம்பவம்:
உ.பி. பிஜ்னோர் நகரை சேர்ந்தவர் அங்கித் குமார். இவரது மனைவி கிரண். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தனது மச்சினிச்சியை திருமணம் செய்வதற்காக நண்பரின் உதவியோடு கிரணை கொலை செய்துள்ளார் அங்கித் குமார்.
இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி பாரத் சோங்கர் கூறுகையில், "தம்பதியருக்கு குழந்தை இல்லாததால், அங்கித் குமார் தனது நண்பர் சச்சின் குமாருடன் சேர்ந்து தனது மனைவியை காரை ஏற்றி கொல்ல சதி செய்தார். விபத்தில் கடும் காயங்களுக்கு ஆளான கிரண், மருத்துவமனையால் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு, விபத்தில் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி தனது மனைவியை தனது மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது சாலை விபத்தில் இறந்துவிட்டதாக அங்கித் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெட்ரோல் பங்கில் தனது பைக்கிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையோரத்தில் கிரணை விட்டுச் சென்றதாகவும் அப்போது, ஒரு கார் அவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றதாகவும் அங்கித் கூறினார். அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
காவல்துறை விசாரணையில் திடுக் தகவல்கள்:
அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்ததில், காரின் உரிமையாளர் சச்சின் என்றும், அவர் அங்கித்தின் நண்பர் என்றும் போலீசார் அடையாளம் கண்டனர்.
விசாரணையின் போது, கொலை செய்ததாக அங்கித் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. ஆனால், குழந்தைகள் இல்லை. எனவே, தனது மச்சினிச்சியை திருமணம் செய்ய விரும்பியுள்ளார்.
மச்சினிச்சியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டிருக்கிறார். ஆனால், அவர் அவர் மறுத்துவிட்டார். இதனால், சதி திட்டம் தீட்ட தனது மனைவியை கொலை செய்துள்ளார்" என்றார்.

