Morning Headlines: ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை.. பெலிக்ஸ் டெல்லியில் கைது! முக்கியச் செய்திகள்..
Morning Headlines May 11: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நட்சத்திர தொகுதிகளை குறிப்பிட்டு தலைவர்கள் வாக்குகளை சேகரிக்க உள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, நடந்து முடிந்துள்ள மூன்று வாக்குப்பதிவில், மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. கடைசியாக கடந்த 7ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, நாளை மறுநாள் (மே.13) நான்காம் கட்டவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. மேலும் படிக்க..
- 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவியர்கள், துணை தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அந்த தேர்வை எழுதியவர்களில் 3,96,152 மாணவர்களும், 4,22,591 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் 75,521 பேர் தோல்வியடைந்தனர். அவர்களுக்கு ஒரு முழு கல்வியாண்டு முழுவதும் வீணாகாமல் தவிர்க்கும் நோக்கில் உடனடியாக அரசு சார்பில் துணை தேர்வுகள் நடத்தப்படுகின்றனர். இதில் பங்கேற்று தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர்கள் இந்த ஆண்டிலேயே தங்களது உயர்கல்வியைத் தொடர முடியும். மேலும் படிக்க..
- சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை இரவு 11.30 மணி அளவில் தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை காவல்துறையினர் அவருக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில் திருச்சிக்கு அழைத்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க..
- சென்னைக்கு மேலே பறந்த சர்வதேச விண்வெளி நிலையம்: வைரலாகும் புகைப்படங்கள்
விண்வெளியில் , பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தை, சென்னைவாசிகள் நேரில் கண்டு களித்ததாக தெரிவித்துள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையமானது, 1998 ஆம் ஆண்டில், பூமியிலிருந்து சுமார் 360 கி.மீ உயரத்தில் நிறுவப்பட்டது. இது 92 நிமிடத்துக்குள் பூமியை முழுமையாக சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் ஒரு நாளில் 16 முறை பூமியை சுற்றி வரும் என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு நாளில் 16 முறை பூமியை சுற்றி வருவதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் 16 முறை சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் காண முடியும். மேலும் படிக்க..