மேலும் அறிய

Morning Headlines: சத்தீஸ்கர், மிசோரமில் வாக்குப்பதிவு தொடக்கம்.. தீபாவளி சிறப்பு ரயில்.. இன்றைய முக்கிய செய்திகள்..!

Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

  • சத்தீஸ்கர், மிசோரமில் இன்று வாக்குப்பதிவு - 60 தொகுதிகள்- 49 லட்சம் வாக்காளர்கள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர், பாஜக ஆட்சி செய்யும் மத்தியபிரதேசம், சந்திரசேகராவ் முதலமைச்சராக உள்ள தெலங்கானா மற்றும் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆளும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது.  பொதுமக்களின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 40,000 மத்திய ஆயுத போலீஸ் படையினர் மற்றும் மாநில காவல்துறையை சேர்ந்த 20 ஆயிரம் பேர் என மொத்தம் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் படிக்க

  • தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மேலும் ஒரு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு... முழு விபரம் உள்ளே..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தீபாவளி நடப்பாண்டில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே ரயில்கள், தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளையும் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரு - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • மிசோரம் தேர்தல் பரப்புரைக்கு செல்லாத பிரதமர் மோடி- மணீப்பூரால் வந்த வினை

மிசோராமில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் அம்மாநிலத்தில் ஒருமுறை கூட பிரதமர் மோடி நேரில் சென்று பரப்புரையில் ஈடுபடவில்லை.வழக்கமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று, அந்த மாநில கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் ஆடைகளை அணிந்து பேசி வாக்காளர்களை கவருவார். மணிப்பூர் விவகாரம் காரணமாக தான் அவர் பரப்புரை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் படிக்க

  • தொடங்கியது மழைக்காலம் - தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கைகள்

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில், தமிழக மின்சார வாரியம் முக்கிய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.மின்சார வயர்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏதேனும் அசாதாரணம் தென்பட்டால், உடனடியாக மின்சார வாரியத்தைத் தொடர்பு கொள்ளவும் 94987 94987” என குறிப்பிடப்பட்டுள்ளது. தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் சாதன பொருட்களை மட்டுமே வீ்டுகளில் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • அரையிறுதியில் நுழைவது யார்? ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பையில் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் முக்கியமான போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், தென்னாப்ரிக்கா அணி அரையிறுதியில் விளையாடுவதும் உறுதியாகிவிட்டது. மீதமுள்ள 2 இடங்களுக்கு  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கடுமையாக போட்டிப் போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
December 2024:  கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ்! ஆண்டின் கடைசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா?
December 2024: கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ்! ஆண்டின் கடைசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா?
Rasipalan December 01:  கடைசி மாதத்தின் முதல் நாள்! எந்த ராசிக்கு எப்படி?
Rasipalan December 01: கடைசி மாதத்தின் முதல் நாள்! எந்த ராசிக்கு எப்படி?
Chembarambakkam: ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா? செம்பரம்பாக்கம் ஏரியால் புது தலைவலியா?
Chembarambakkam: ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா? செம்பரம்பாக்கம் ஏரியால் புது தலைவலியா?
Embed widget