உழச்சா முன்னேற முடியாது..ரீல்ஸ் போட்டா பிரபலம் ஆகலாம்..நம்ம கூமாபட்டிக்காரர பாருங்க....
தனது சொந்த ஊரான கூமாபட்டியை வைத்து ரீல்ஸ் பதிவிட்ட நபர் தற்போது பிரபல சென்னை சில்க்ஸ் கடையின் விளம்பரத்தில் நடித்துள்ளார்

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு வைரலாகும் நபர்களுக்கு உடனுக்கு உடன் சினிமாவில் அல்லது தொலைக்காட்சியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது. கண்டெண்ட் இல்லை என்றாலும் எதையாவது பேசி வைரலாக வேண்டும் என்பது தான் பலரது நோக்கமாக இருக்கிறது. இவர்களை விளம்பரத்தில் அல்லது படத்தில் சின்ன காட்சியில் நடிக்க வைத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என ஊடகத்தினர் நினைக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி கிராமத்தை உலகளவில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக்கியவர் தங்கபாண்டி தற்போது பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
கூமாபட்டி ஸ்டார் தங்கபாண்டி
ஏற்கனவே வாட்டர்மெல் ஸ்டார் திவாகர் செய்யும் அட்ராசிட்டிகளை தாங்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள். இவரைத் தொடர்ந்து கூமாபட்டி ஸ்டார் தங்கபாண்டி உருவாகியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூமாபட்டி கிராமத்தை பாராட்டி தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டிருந்தார். தனது ஊருக்கு இவர் கொடுத்த பில்ட அப்களை பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக கூமாபட்டியை சுற்றி பார்க்க கிளம்பினர். ஆனால் தனது வீடியோவில் தங்கபாண்டி காட்டிய அனையில் மக்கள் குளிக்க அனுமதி கிடையாது என்று தெரிந்து பலர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். ஒரு சின்ன சாதாரண கிராமத்தை ஒரே ஆளாக வீடியோ வெளியிட்ட தங்கபாண்டியை பலர் யூடியுப் சேனல்கள் வீடியோ எடுத்து பிரபலமாக்கினர். 'ஏங்க' என அவர் கத்தும் மாட்யூலேஷனும் வைரலாகியுள்ளது.
தற்போது பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸின் தொலைக்காட்சி விளம்பரத்திற்ல் கூமாபட்டி ஸ்டார் தங்கபாண்டி நடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள் . " அதிக நேரம் உழைச்சா முன்னேறலாம் கையில பணம் இருந்தா முன்னேறலாம்னு சொல்றதலாம் பொய் ஒரு மனுஷனுக்கு நேரம் அதிர்ஷ்டம் இது ரெண்டும் கிடைச்சாதான் முன்னேற முடியும் இவன மாதிரி' என இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரம் தனது சொந்த முயற்சியால் இன்று இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியிருக்கும் தங்கபாண்டி ரசிகரகள் அவரை பாராட்டி வருகிறார்கள்
அதிக நேரம் உழைச்சா முன்னேறலாம்
— சங்கர் ரஜினி ரசிகன் (@Rajinirasigan53) August 23, 2025
கையில பணம் இருந்தா முன்னேறலாம்னு சொல்றதலாம் பொய்
ஒரு மனுஷனுக்கு நேரம் அதிர்ஷ்டம் இது ரெண்டும் கிடைச்சாதான் முன்னேற முடியும் இவன மாதிரி 👌👌❤ pic.twitter.com/l0bkcfUr3R





















