விஜிதா சொல்லித்தான் செய்தேன்.. இந்திய அணிக்கு கோப்பை.. உண்மையை சொன்ன ராகுல் டிராவிட்
Rahul Dravid: இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஆனது குறித்து ராகுல் டிராவிட் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். ஒரு நாள் போட்டியை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிட்டை மிஞ்ச எவரும் இல்லை. இவர் செய்த சம்பவம் அப்படி இருந்தன. எதிரணியில் இருக்கும் பவுலர்களை கலங்கடிக்க வைக்கும் அவரது மாஸ்டர் ஸ்டோக். எத்தனை கி.மீ வேகத்திலும் பந்தை வீசினாலும் ராகுல் டிராவிட்டை மீறி பந்து வெளியே செல்லாது என்ற அளவிற்கு ரெக்கார்டுகளையும் அவர் படைத்திருக்கிறார். இந்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆனது எப்படி?
முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின், லெஜண்ட் கிரிக்கெட்டர்களை அழைத்து கலைந்துரையாடி வருகிறார். அதுபோன்று சமீபத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுடனும் உரையாடி வந்தார். தற்போது ராகுல் டிராவில் அஸ்வின் உடனான கலந்துரையாடலில் பல சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். அப்போது இந்திய தலைமைப் பயிற்சியாளர் ஆனது குறித்து பேசிய டிராவிட், "இந்த நேரத்தில் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் எண்ணம் எனக்கு இல்லை.
மனைவி விஜிதா கொடுத்த ஊக்கம்
நான் அப்போது பயிற்சியளிப்பதை மிகவும் மகிழ்ச்சியாக செய்து கொண்டிருந்தேன். டெல்லி ஐபிஎல் அணி மற்றும் இந்தியா ஏ 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்குப் பயிற்சியளிப்பது மிகவும் பிடித்திருந்தது. அதே நேரம் குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட முடிந்தது. அதனால் இரண்டையும் சமமாக பார்த்துக்கொண்டேன் என அவர் தெரிவித்தார். பின்னர் பேசிய ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளர் வாய்ப்பு திடீரென வந்தபோது, நான் ரொம்ப தயக்கமாக இருந்தது. ஆனால், என் மனைவி விஜிதா, உங்களுக்கு உயர் மட்டத்தில் பயிற்சியளிப்பதில் ஆர்வம் இருக்கிறது. சில வருடங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செய்யுங்கள் என ஊக்கம் அளித்தார். அவரது ஆலோசனைக்கு பின்பு தான் இந்திய அணியின் தலமைப் பயிற்சியாளர் பணியை ஏற்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராட்டு
கடந்த 2021ஆம் ஆண்டு ரவி சாஸ்திரியிடமிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ராகுல் டிராவிட் ஏற்றார். பதவிக்காலத்தின் கடைசி தொடரான 2024 டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தார். இந்திய பயிற்சியாளர்களில் ராகுல் டிராவிட் சிறந்த இடத்தையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






















