Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
Indias Richest CM: இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில், ஆந்திராவின் சந்திர பாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார்.

Indias Richest CM: இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில், மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி கடைசி இடத்தை பிடித்துள்ளார்.
நாட்டின் பணக்கார முதலமைச்சர்:
ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் உள்ள முதலமைச்சர்களில் மிகப்பெரிய பணக்காரராக ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு உருவெடுத்துள்ளார். டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) அமைப்பு ஆகியவை, நாடு முழுவதும் உள்ள மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 30 தற்போதைய முதலமைச்சர்களின் பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்து இந்த பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த பிரமாண பத்திரங்கள் கடைசியாக அவர்கள் தேர்தலில் போட்டியிட்டபோது சமர்பிக்கப்பட்டதாகும்.
சந்திரபாபு நாயுடுவின் சொத்து விவரம்:
வெளியாகியுள்ள பட்டியலின்படி, பகுப்பாய்வு செய்யப்பட்ட 30 முதலமைச்சர்களில் இரண்டு பேர் மட்டுமே கோடீஸ்வரர்கள் கிடையாதாம். கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டுமே ஆயிரத்து 632 கோடி ரூபாயாம். வெளியாகியுள்ள தகவல்களின்படி பட்டியலில் முதலிடம் பிடித்து சந்திர பாபுவின் சொத்து மதிப்பு, 931 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்ட ஹெரிடேஜ் ஃபுட்ஸ் என்ற பால் நிறுவனத்திலிருந்தே அவரது பெரும்பான்மையான வருமானம் கிடைக்கிறது. பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதில் இவர் கொண்டுள்ள பங்குகளின் மதிப்பு மட்டுமே சுமார் 760 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.இந்நிறுவனத்தின் 41 சதவிகித பங்குகளை அவரது குடும்பம் மட்டுமே வைத்துள்ளதாம்.
முதலமைச்சர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு:
பட்டியலில் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பிரேமா கண்டு 332 கோடியுடன் இரண்டாவது இடத்தையும், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா சுமார் 52 கோடியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பட்டியலில் 14வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 8.88 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், புதுச்சேரி முதலமைச்சரான ரங்கசாமி 38 கோடியே 39 லட்சம் சொத்துகளுடன் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார். தென் மாநிலங்களான தெலங்கானாவின் ரேவந்த் ரெட்டி 30.04 கோடியுடன் 7வது இடத்தையும், கேரளாவின் பினராயி விஜயன் 1.18 கோடியுடன் 28வது இடத்தையும் பிடித்துள்லனர்.
கடைசி இடத்தில் மம்தா
பட்டியலில் கடைசி இரண்டு இடத்தை ஜம்மு & காஷ்மீர் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர்கள் பிடித்துள்ளனர். அதன்படி ஒமர் அப்துல்லாவின் சொத்து மதிப்பு 55 லட்சமாகவும், மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு வெறும் 15 லட்சமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இருப்பவட்களில் கோடீஸ்வரர் அல்லாத இரண்டு முதலமைச்சர்களும் இவர்களே ஆவர்.
Analysis of Current Chief Ministers from 27 State Assemblies and 3 Union Territories of India 2025#ADRReport: https://t.co/JAquvRaxz5 pic.twitter.com/QyPqz0VnhR
— ADR India & MyNeta (@adrspeaks) August 23, 2025
டாப் 10 பணக்கார முதலமைச்சர்கள்:
- சந்திர பாபு நாயுடு, ஆந்திரா - ரூ.931.83 கோடி
- பிரேமா கண்டு, அருணாச்சல பிரதேசம் - ரூ.332.56 கோடி
- சித்தராமையா, கர்நாடகா - ரூ.51.93 கோடி
- நெய்பியூ ரியோ, நாகாலாந்து - ரூ.46.95 கோடி
- மோஹன் யாதவ், மத்திய பிரதேசம் - ரூ.42.04 கோடி
- ரங்கசாமி, புதுச்சேரி - ரூ.38.39 கோடி
- ரேவந்த் ரெட்டி, தெலங்கானா - ரூ.30.04 கோடி
- ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் - ரூ.25.33 கோடி
- ஹிமந்தா பிஸ்வா, அசாம் - ரூ.17.27 கோடி
- கன்ராட் சங்மா, மேகாலயா - ரு.14.06 கோடி





















