News Wrap: காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் காவல்துறைத் தலைவராக திரு சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி., மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
NEET AK Rajan committee : ஏ.கே.ராஜன் நீட் கமிட்டி ரத்து ஆகுமா? - சட்டம் சொல்வது என்ன?
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
நீட் தேர்வை ரத்து செய்வது தமிழ்நாடு அரசின் கடமை என பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு இதுவரை, 31.83 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. சுமார் 78 லட்சம் (78,44,885) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இங்கிலாந்து – ஜெர்மனிக்கு இடையே நேற்றிரவு நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஸ்வீடன் - உக்ரேன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உக்ரேன் அணி வெற்றிபெற்றது.
Moderna gets DCGI Approval: வருது அடுத்த தடுப்பூசி : மாடர்னா இறக்குமதிக்கு இந்தியா அனுமதி!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,60,423 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 4 ஆயிரத்து 512 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பேரிடர் காலத்தில் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை இல்லாத நிலையில் பொருளாதார சிக்கலை சந்தித்து வரும் வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்களுக்கு கொரோனா நிவாரணநிதியும்,கொரோனாவால் பலியான வழக்கறிஞர்கள் குடும்பத்திற்கு 50லட்சம் நிதியுதவியும் வழங்கிட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
’அரசு பள்ளியில் படித்து ஐபிஎஸ் ஆன சைலேந்திரபாபு’ தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமனம்..!
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம்-IV-ன் (2021 ஜூலை-நவம்பர்) கூடுதலாக 198.78 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்தது.
பேஸ்புக், கூகுள் புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்கவேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியது. முன்னதாக, சமூக இணைய தளம், டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளம் தொடர்பான தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021-ஐ மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது .