Breaking News LIVE : திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
Latest Breaking News in Tamil LIVE
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 31,382 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 32,542 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், தொற்று இன்னும் உள்ளதால், இது மற்றொரு அலைக்கு வழிவகுக்கலாம் என மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார். பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை பரப்ப, நேற்று, ரேடியோ நிலையங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
TNPSC தேர்வில் தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் தேர்ச்சி பெற வேண்டும்?
TNPSC தேர்வில், தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற தாள்களை மதிப்பீடு செய்யும் நடைமுறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முதல்வரின் பார்வைக்கு பிறகு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்பு
பேரறிவாளனுக்கு 5-வது முறையாக பரோல் நீட்டிப்பு
பேரறிவாளனுக்கு 5-வது முறையாக பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு
எஸ்பி பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு நாள் இசைக் கலைஞர்கள் அஞ்சலி
எஸ்பி பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு நாளை திரை இசை கலைஞர்கள் சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது. இதில் இசைஞானி இளையராஜா மற்றும் பின்னனி பாடகர் சுரேந்தர், தினா, செல்வமணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த 36 மணி நேரத்தில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது
தமிழ்நாட்டில் கடந்த 36 மணி நேரத்தில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.