Diwali Wishes: நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக தீபாவளி கொண்டாட்டம்..பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
देश के अपने सभी परिवारजनों को दीपावली की ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
Wishing everyone a Happy Diwali! May this special festival bring joy, prosperity and wonderful health to everyone’s lives.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.” என பதிவிட்டுள்ளார்.
உ.பி. முதல்வர் யோகி வாழ்த்து:
தீபாவளியை முன்னிட்டு, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “அசத்தியத்தின் மீது சத்தியம், கொடுங்கோன்மைக்கு எதிரான அறம், இருளின் மீது வெளிச்சம் என்ற மாபெரும் திருநாளான தீபாவளி திருநாளில் மாநில மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும்! பகவான் ஸ்ரீ ராமர் மற்றும் மாதா ஜானகியின் ஆசீர்வாதத்துடன், இந்த புனித திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்தின் வெள்ளை ஒளியால் ஒளிரட்டும். ஜெய் ஸ்ரீ ராம்!” என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து:
ஒளியின் திருநாளான தீபாவளித் திருநாளில் எனது அன்புக்குரிய தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழா, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அல்லது “வசுதெய்வ குடும்பகம்” என்ற நமது சனாதன தத்துவத்தின் இலட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு இது. உலகெங்கிலும் உள்ள பாரதவாசிகள், மதம் அல்லது மொழி வேறுபாடின்றி ஒரே குடும்பமாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
ஆளுநர் ரவி அவர்கள் மக்களுக்கு விடுக்கும் #தீபாவளி வாழ்த்துச் செய்தி. #Deepawali #Greetings @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @PIB_India @PIBCulture @pibchennai @DDNewsChennai @airnews_Chennai @ANI @PTI_News pic.twitter.com/BMO0j22mC3
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 11, 2023
நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஆத்மநிர்பர் பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் “Vocal for Local” ஆக வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் பிற பரிசுகளை வாங்க உறுதிமொழி எடுப்போம். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூரில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி வேலை செய்யும் தொழிற் சாலைகளுக்குச் சென்று, நம் தீபாவளியை ஒளிரச் செய்ய பெண் தொழிலாளர்களின் உழைப்பை நேரில் பார்த்தேன்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்கி அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்வோம் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம். அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்.