மேலும் அறிய

Women Marriage Age: பெண்ணின் திருமண வயதை அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், குழந்தைத் திருமண தடைச் சட்டம் ஆகிய சட்டங்களின் மூலம் திருமண வயது முறைப்படுத்தப்பட்டுள்ளது

ஜெயா ஜெட்லி பணிக்குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில்,  பெண்ணின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்கும் சட்டத் திருத்த  மசோதாவுக்கு மத்திய அமைசச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.      

4 ஜூன் 20 20 அன்று, தாய்மை அடையும் வயது, பேறுகால உயிரிழப்பைக் குறைப்பதற்கான தேவைகள் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துதல் போன்றவை தொடர்பான விஷயங்கள் குறித்து பரிசீலிப்பதற்காக பணிக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.

பெண்ணின் திருமண வயது தொடர்பான சட்டத்திட்டங்கள் :  இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், குழந்தைத் திருமண தடைச் சட்டம் ஆகிய சட்டங்களின் மூலம் திருமண வயது முறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act-1955) அல்லது சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act-1954)சட்டங்களின்படி திருமணமாகும், ஆணுக்குக் குறைந்தது 21 வயது முடிந்து இருக்க வேண்டும். பெண்ணுக்கு குறைந்தது 18 வயது முடிந்து இருக்க வேண்டும்.

Sex Workers Rehabilitation | பாலியல் தொழிலாளிகள் மறுவாழ்வு, ஆள் கடத்தல் தடுப்பு மசோதா.. தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?

குழந்தைத் திருமணக் கட்டுப்பாடுச் சட்டம் (Child Marriage Restraint Act-1929). இதுவே, குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முதல் சட்டமாகும். இதிலுள்ள குறைபாடுகளைக் களைந்து முக்கிய மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்டதுதான் குழந்தைத் திருமண தடைச் சட்டம் ( Prohibition of Child marriage Act -2006), அதன்படி, 18 வயது நிறைவடையாத பெண்ணும் 21 வயது நிறைவடையாத ஆணும் செய்து கொள்ளும் திருமணமே குழந்தைத் திருமணம் ஆகும்.

Women Marriage Age: பெண்ணின் திருமண வயதை அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இச்சட்டத்தின் கீழ், 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் குற்றவாளி ஆவார். அதுபோல 21 வயது நிறைவடையாத ஆண் மகனை திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளியாவார். குழந்தைத் திருமணத்தை நடத்தியவர், நடத்த தூண்டியவர் அனைவரும் குற்றவாளிகள். அப்பெண்குழந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் அல்லது காப்பாளர் மற்றும் குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்த, அனுமதித்த பங்கேற்ற மற்றும் அந்த திருமணத்தை தடுக்க தவறிய எந்த நபரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.

பெண்ணின் திருமண வயது ஏன் அதிகரிக்கப்படுகிறது?  

குழந்தைத் திருமணம் செய்வதால், கர்பப்பை முழு வளர்ச்சி அடையாத காரணத்தினால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், எடைகுறைவான குழந்தை பிறக்கவும், தாய்சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இரத்த சோகை, உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Women Marriage Age: பெண்ணின் திருமண வயதை அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எல்லாவற்றிற்கும் மேலாக படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வி, அறிவு, தடைபட்டு தன்னம்பிக்கை குறைவு, படிப்பறிவு, பொது அறிவு குறைவு போன்றவை ஏற்படுகிறது. இதனால் பாலியல் ரீதியான பிரச்சினைகள், கணவன், மனைவி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. கணவன், மனைவிக்கிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால், இளம் விதவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், ஆண்களுக்கு நிகரான திருமண நிறைவு வயது பெண்களுக்கும் இருக்கு வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

சட்டத்திருத்தம் மட்டும் போதுமா?  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைத் திருமணக் கட்டுப்பாடுச் சட்டம் செயலாக்கத்தை ஆய்வு செய்து வரும் பெண் வழக்கறிஞர் Madhu Mehra சட்டத் திருத்த மசோதா பெண்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறார். 

இதுகுறித்த அவரின் வாதங்கள் பின்வருமாறு: 

முதலாவதாக, 2006 குழந்தைத் திருமண தடை சட்டம் - குழந்தை திருமணத்தை செல்லாததாக்கவில்லை. மாறாக, செல்லாததாக்கும். அதாவது, ஆள் கடத்தல், ஏமாற்றுதல், நிர்பந்தங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைத் திருமணத்தை செல்லாதாக்கும். மேலும், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் நிறை வயது எய்திய இரண்டாண்டிற்குள் நடைபெற்ற தீர்மானத்தை செல்லாததாக்கும் தீர்வும் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அத்திருமணத்தை ஏற்றுக் கொண்டால் அத்திருமணத்தை செல்லாது என்று கருத முடியாது. 

கடந்த 10 ஆண்டுகளாக, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட திருமணங்கள் பெரும்பாலும் காதல் திருமணங்களாகவே உள்ளன. இந்திய சமூகத்தில் காதல் திருமணங்களுக்கு எதிரான நிலைப்பாடு இதன்மூலம் தெளிவாக உணர முடிகிறது. கேரளா  ஹாதியா வழக்கு இதற்க சான்றாக உள்ளது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget