News Today Live | நமக்குள் ஏற்பட்ட விரிசல்தான் எதிரிகளுக்கு வாய்ப்பாக போய்விட்டது - சசிகலா பேச்சு
அதிமுகவின் 50-வது ஆண்டு, பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது
LIVE
Background
நாம் ஒன்றாக வேண்டும்.. கழகம் வென்றாக வேண்டும் - சசிகலா
அதிமுக முன்பு பிளவுபட்டபோது, இதே ராமாவரம் தோட்டத்தில்தான் ஜானகி என்னை அழைத்துப் பேசினார். நாம் ஒன்றாக வேண்டும். கழகம் வென்றாக வேண்டும் என்று பேசினார் சசிகலா.
கழகம்தான் கோவில். கழகத்தைக் காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு - சசிகலா
கழகம்தான் கோவில். கழகத்தைக் காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு - சசிகலா
நமக்குள் ஏற்பட்ட விரிசல்தான் எதிரிகளுக்கு வாய்ப்பாக போய்விட்டது - சசிகலா பேச்சு
நமக்குள் ஏற்பட்ட விரிசல்தான் எதிரிகளுக்கு வாய்ப்பாக போய்விட்டது, என ராமாவரத்தில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா பேசியுள்ளார்
அதிமுக பொன்விழா கொண்டாட்டம் - அலுவலகத்தில் கொடியேற்றிய ஓபிஎஸ், இபிஎஸ்
அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதிமுக கொடியையும் ஏற்றினார்கள். அத்துடன் பொன்விழா மலரை வெளியிட்டு இனிப்புகள் வழங்கினார்கள். இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.
எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக கொடியேற்றிய சசிகலா
சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா அதிமுக கொடி ஏற்றினார். அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டும் திறக்கப்பட்டது.