Watch Video: வயசு வெறும் நம்பர்தான்.. ரோப் கயிற்றில் சாகசம் செய்யும் 72 வயது பாட்டி - வைரல் வீடியோ..
கேரளாவில் 72 வயதான பாட்டி ரோப் கயிற்றில் ஆனந்தமாக தொங்கியபடி சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கேரளாவில் தனது முதிர்ந்த வயதிலும் குழந்தைதையப் போல, பதின்ம வயது பருவத்தினரைப் போல ஜிப்-லைனில் சென்று வயதான பெண்மணி ஒருவர் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோப் கயிறுகளில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அந்தரத்தில் தொங்கியபடி செல்வதைத்தான் ஜிப் லைன் என்று கூறுவார்கள்.
பெரும்பாலும் இளைஞர்களே இதுபோன்ற சாகச விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள். கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பிரபல பூங்காவிலும் இந்த ஜிப் லைன் ரோப் வசதி உள்ளது.
View this post on Instagram
அந்த ஜிப் லைனில் 72 வயது மதிக்கத்திக்க பாட்டி ஒருவர் பாதுகாப்பு பெல்டும், தலைகவசமும் அணிந்து கொண்டு செல்கிறார். சேலை அணிந்து கொண்டு ரோப்கயிறை இறுக்கப் பற்றிக்கொண்டு அந்த வயதான பாட்டி அந்தரத்தில் சறுக்கியபடி செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவ்வாறு சென்ற பிறகு, ரோப் கயிற்றில் இருந்து இறங்கிய பாட்டி ஆனந்தத்தில் சிரிப்பதுபோல அந்த வீடியோ முடிக்கப்பட்டுள்ளது. யாத்ரா பிரேமிகல் என்ற இன்ஸ்டாகிராம் நபர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளமைப்பருவத்திலும், நடுத்தர வயதிலும் பொறுப்புகள், குடும்ப பாரங்கள் என்று தனது வாழ்க்கை முழுவதும் கழித்து, தான் பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்துவிட்டோம் என்று 60 வயதுகளை கடந்த பிறகுதான் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்று பல முதியவர்களுக்கும் எண்ணம் ஏற்படுகிறது. அவ்வாறு எண்ணம் ஏற்படும் சில முதியவர்களின் ஆசைகளை சில பிள்ளைகள் நிறைவேற்றுகிறார்கள். சில பிள்ளைகள் பெற்றோர்களையே கவனிக்காமலும் இருக்கிறார்கள்.
மேலும் படிக்க Rocky Review: ரத்தம் தெறிக்க தெறிக்க...வழக்கமான ரிவென்ஞ் கதையை தனித்து சொல்லியதா ராக்கி?
மேலும் அறிந்து கொள்ள : Valimai Ajith Bike: இது ஓடாது பறக்கும்.. வலிமை படத்தில் அஜித் ஓட்டும் MV Agusta Brutale 800 -ன் ஹைலைட்ஸ்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்