மேலும் அறிய

Priyansh Arya Profile: CSK - வை அலறவிட்ட இளைஞன்! பஞ்சாப்பின் Rocky Boy! யார் இந்த பிரியான்ஸ் ஆர்யா?

இந்த சின்னப்பையனை ஏன் 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தீர்கள் என்று பஞ்சாப் அணி நிர்வாகிகள் ரிக்கிப் பாண்டிங்கை கடிந்து கொள்ள... இல்லை இவனிடம் ஒரு POTENTIAL இருக்கிறது என்னை நம்புங்கள்..  நான் உங்களுக்கு சத்தியம் செய்து தருகிறேன்.. இவன் நிச்சயம் இந்த ஐபிஎல்லில் முத்திரை பதிப்பான் என்றார் பஞ்சாப் அணியின்  பயிற்சியாளர் ரிக்கிப்பாண்டிங்...அந்த இளைஞன் தான் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி சீட்டுக்கட்டு போல் சரிந்து கொண்டிருக்க மதம் கொண்ட யானை போல் சிஎஸ்கே-வின் பந்தை நொறுக்கிய பிரியான்ஷ் ஆர்யா! யார் இவர்?

பஞ்சாப் அணிக்காக அதிவேக சதத்தை பூர்த்தி செய்த பிரியான்ஷ் ஆர்யா டெல்லியில் பிறந்தவர். இவரது தாயும் தந்தையும் அரசு பள்ளி ஆசிரியர்கள் என்பதால் எப்படியாவது தனது மகனை ஒரு அரசு வேலைக்கு அனுப்பி விட வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. ஆனால் பிரியான்ஷ் ஆர்யாவுக்கோ கல்வியில் சிறிதும் நாட்டம் இல்லை... டெல்லியில் பிறந்து இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சும் விராட் கோலியைப் போல் தானும் ஆகவேண்டும் என்ற ஆசையில் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்த ஆர்யா தனது விருப்பத்தை வீட்டில் சொல்ல... முதலில் வேண்டாம் என்றவர்கள் பின்னர் மகனின் ஆசைக்கு பச்சைக்கொடி காட்டினார்கள்..

இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கான KEY ஆகா இருக்கும் IPL-ல் தொடரில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தின் தனது பெயரை கொடுத்த இவரை யார் ஏலத்தில் எடுக்கவில்லை... ஆனாலும் மனம் உடையாதா பிரியான்ஷ் ஆர்யா தீவிர பயிற்சிகளை மேற்கொண்டார். தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் வடக்கு டெல்லிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மனன் பரத்வாஜ் எனும் இடது கை சுழற்பந்து வீச்சாளரின் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு  பறக்க விட்டு அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். 

இதன் மூலம் போட்டியான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஷ்வர் குமார், பியூஷ் சாவ்ல உள்ளிட்ட ஸ்டார் ப்ளேயர்ஸ் இருந்த U-P  அணிக்கு எதிராக 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் என 103 ரன்களை குவித்தார் பிரியான்ஷ் ஆர்யா. இதன் மூலம் டெல்லி அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக உருவெடுத்த அவர் 7 இன்னிங்ஸ்களில் 166.91 ஸ்ட்ரைக் ரேட்டில் 222 ரன்களை குவித்தார். இவரது இந்த அசுரத்தனமான ஆட்டத்தை கண்ட அஷ்வின் என்னோட நம்பர் ஒன் வீரர் இவர் தான் என்று புகழாரம் சூட்டினார்.

இச்சூழலில்தன் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் பிரியான்ஷ் ஆர்யா ஏலத்திற்கு வந்தார். டெல்லி, பெங்ளூரு அணிகள் போட்டி போட்டாலும் கடைசியாக இவரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.  3 கோடிக்கு இந்த சின்னப்பையனை ஏலத்தில் எடுத்த முடிவு சரிதான என்று பஞ்சாப் அணி நிர்வாகிகள் குழம்பிபோய் இருக்க என்னை நம்புங்கள் இந்த பையனிடம் ஒரு திறமை இருக்கிறது. இவன் நிச்சயம் இந்த ஐபிஎல்-ல் முத்திரை பதிப்பான் என்று விடாப்பிடியாக இருந்து ஏலத்தில் எடுக்க வைத்தார் ரிக்கிப்பாண்டிங்க். இன்றைக்கு ரிக்கப்பாண்டிங் பெயரை காப்பாற்றியதோடு சிஎஸ்கே அணிக்கு எதிரன அதிவேக சதத்தின் மூலம் தன்னுடைய பெயரையும் முத்திரையாய் பதித்து விட்டார் பிரியான்ஷ் ஆர்யா.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget