மேலும் அறிய
Advertisement
Today Headlines: உள்ளூர் முதல் உலகநாடுகள் வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் இதோ..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாம் இன்று முதல் துவக்கம்; தர்மபுரி தொப்பூரில் முகாமைத் துவக்கிவைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
- விலைவாசி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைக் குழப்புகிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு; ஆப்பிள் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு
- பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தமிழ்நாட்டில் நடத்திய சோதனையில் ஆவணங்கள், செல்போன்கள் கைப்பற்றிய என்.ஐ.ஏ; தலைமறைவாக உள்ளவர்கள் குறித்து தகவல் அளித்தால் ரூபாய் 5 லட்சம் சன்மானம்
- மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
- 2 ஆண்டில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
- மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என துணைத்தலைவர் தங்கவேல் பேச்சு
- இந்திய கூட்டாச்சி தத்துவம் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் சீதாராம் யெச்சூரி மதுரையில் பேச்சு
- அரியலூரில் பட்டியலினத்தவரை காலில் விழவைத்த வன்கொடுமை; ஒருவர் கைது, திமுக பிரமுகர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
- ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்து சென்ற இளைஞரை மிரட்டி ரூபாய் 20 ஆயிரம் பறிப்பு; பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் கொண்ட கும்பல்
- ஈரோடு கடம்பூரில் கடந்த ஆறு மாதங்களாக அச்சுறுத்தி வந்த யானை பிடிபட்டது; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
- சிவகாசி அருகே ஒரு டன் புகையிலைப் பொருட்களை டீலர் போல நடித்து பிடித்த காவல்துறை
இந்தியா:
- கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம்ல் கிருஷ்ணராஜ் மற்றும் கபினி அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து உயர்வு
- ஜி20 நாடுகளுக்கு இடையேயான பேரிடர் ஆபத்து குறைப்பு கூட்டம் சென்னையில் இன்று முதல் துவங்குகிறது.
- மணிப்பூரில் உள்ள நிலவரம் அண்டை மாநிலத்துக்கும் பரவும் அச்சம்; அண்டை மாநிலமான அசாமிற்கு இடம்பெயரும் மெய்த்தி மக்கள்
- மணிப்பூரில் நடந்த கொடூரத்துக்கு முக்கிய காரணம் வதந்தி, போலி செய்திகள் என அதிர்ச்சி தகவல், டெல்லியில் நடைபெற்ற குற்றச்சம்பவத்தை மணிப்பூரில் நடந்ததாக செய்தி பரப்பியது தான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
- காசியில் உள்ள ஞானவாபி மசூதி கோவில் மீது கட்டப்பட்டதா என்ற ஆய்வு இன்று முதல் துவக்கம்
- பீகாரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்பு
- கர்நாடகாவில் இரண்டு டன் தக்காளியுடன் வாகனத்தை கடத்திய தம்பதி சென்னையில் கைது
உலகம்
- பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானில் கனமழை இதுவரை 44 பேர் பலி
விளையாட்டு
- இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றியை நெருங்கும் இந்தியா; ஒயிட்-வாஷில் இருந்து தப்புமா வெஸ்ட் இண்டீஸ்; இன்று கடைசி நாள் ஆட்டம்
- ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் இங்கிலாந்தின் வெற்றியைப் பறித்த மழை; போட்டி டிரா
- எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது பாகிஸ்தான்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion