Headlines Today, 31 Aug: நாளை பள்ளி, கல்லூரி திறப்பு....சோனியா அகர்வால் கைது...இந்திய வீரர் ஓய்வு...இன்னும் பல..!
Headlines Today, 31 Aug:கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
* தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
* சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மற்றும் இதர மாவட்டங்களில் மரியன்னை பிறந்தநாள் திருவிழாவின்போது பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்து தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
* வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை தொடர்கிறது. ஞாயிறுதோறும் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
* செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி, அடையாள அட்டை, சீருடையுடன் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தங்களது வீடு அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* டோக்கியோ பாராலிம்பிக்கில் 2 தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்தது. அவனி, சுமித் பதக்கம் வென்று அசத்தினார்கள்.
* ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் விடுத்த கெடு முடிவடைவதால் அமெரிக்க படை இன்றோடு அங்கிருந்து வெளியேறுகிறது.
* செங்கல்பட்டில் இருந்து தென்மாநிலங்களுக்கு ஹோல் சேல் முறையில் கஞ்சா விற்பனை- 11 பேர் கைது
* சென்னையில் 7வது நாளாக விலைமாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
* போதைப்பொருள் விவகாரத்தில் மாடலும், கன்னட நடிகையுமான சோனியா அகர்வாலை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
* “துளசியின் மூத்த மகன் கோகுல் துளசி போன்றே இருப்பதாகவும், இளைய மகன் பிரதீப் துளசியின் கணவர் வடிவேலழகனை போன்று இருப்பதால் அடித்து துன்புறுத்தும்படி கள்ளக்காதலன் பிரேம் குமார் கூறியுள்ளார்’’ என்று குழந்தையை தாக்கிய கொடூர தாய் வாக்குமூலம் அளித்துள்ள்ளார்.
* தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1523 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,13,360 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 188 பேரும், சென்னையில் 183 பேரும், ஈரோட்டில் 129 பேரும், தஞ்சாவூரில் 107 பேரும், செங்கல்பட்டில் 92 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
* கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். இதனால், அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.