மேலும் அறிய

Canada India Diplomats: இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வெளியேற்றம்.. தொடரும் மோதல்

Canada`s India Diplomats: இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கைய குறைத்து கனடா நடவடிக்கை எடுத்துள்ளது.

Canada`s India Diplomats:  இந்தியாவில் இருந்த தூதரக அதிகாரிகள் 41 பேரை வெளியேற்றிய கனடா அரசு, அவர்களை சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்:

இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தின் அதிகாரிகளில் பெரும்பாலானோரை அந்நாட்டு அரசு வெளியேற்றி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 10ம் தேதிக்குள் கனடா தூதரகத்தில் இருந்து 41 அதிகாரிகளை வெளியேற்ற  வேண்டும் என, இந்திய அரசு உத்தரவ்ட்டு இருந்தது. அதனடிப்படையில் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை கனடா குறைத்துள்ளது.

தொடரும் கனடா - இந்தியா பிரச்னை:

சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில், இந்திய "ஏஜெண்டுகளின்" பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தன.  இதனிடையே, இந்தியா மற்றும் கனடா இடையேகடுமையான கருத்து மோதல் ஏற்பட்டதோடு, தூதரக அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தான், இருநாடுகளுக்கு இடையே உள்ள தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை சமன் செய்யும் வகையில், கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை அக்டோபர் 10ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டது. அதனடிப்படையில், டெல்லி தவிர நாட்டின் பிறபகுதிகளில் இருந்த கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா குற்றச்சாட்டு:

இதனிடையே, நாட்டின் உள்விவகாரங்களில் கனடா தூதரக அதிகாரிகள் தலையிடுவதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ”கனடாவில் உள்ள இந்தியாவின் பலத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கனட தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், அது குறைக்கப்பட வேண்டும். இராஜதந்திர வலிமையில் சமநிலையை உறுதி செய்வதில் எங்கள் கவனம் உள்ளது” என பேசினார். 

இந்தியாவின் எதிர்ப்பு நடவடிக்கை:

இந்திய நடவடிக்கை தொடர்பாக பேசியுள்ள இந்தியாவிற்கான முன்னாள் கனடா தூதர் கேபி ஃபேபியன், “ தற்போது ​​கனடாவில் 21 இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளனர். அதேநேரம் இந்தியாவில் கனடா தூதரக அதிகாரிகள் 62 பேர் உள்ளனர். எனவே, அதன் தூதரக ஊழியர்களில் 41 பேர் திரும்பப் பெறப்பட வேண்டும். அதாவது, கனடா ஒரு தூதரக அதிகாரியை வெளியேற்றியதற்கு பதிலடியாக, 42 தூதரக அதிகாரிகளை வெளியேற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு எப்போதும் பொருந்தாது. ஆனால், கனடாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget