White Fungus | கறுப்புப் பூஞ்சைக்கு அடுத்து வெள்ளைப் பூஞ்சை: குழந்தைகளை பாதிக்குமா?
வெள்ளைப் பூஞ்சையும் கறுப்புப் பூஞ்சை போலத்தான் நோய் எதிர்ப்பு சத்து குறைவாக இருப்பவர்களை பாதிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களையும் மிக நீண்டகாலமாக ஸ்டீராய்ட் மருந்து எடுத்துக்கொள்பவரையும் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கொரோனா, கறுப்புப் பூஞ்சை பாதிப்புகளை அடுத்துத் தற்போது வெள்ளைப் பூஞ்சை பாதிப்பு குறித்த புகார்களும் எழுந்துள்ளன.கறுப்புப் பூஞ்சை பாதிப்பு குறித்த பதட்டமே இன்னும் தனியாத நிலையில் பீகார் மாநிலத்தில் ஒரு மருத்துவர் உட்பட 4 பேருக்கு இந்த வெள்ளைப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளைப்பூஞ்சை பாதிப்பு அறிகுறிகள் என்ன?
- இருமல்
- காய்ச்சல்
- டயேரியா
- நுரையீரலில் கரும்புள்ளிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை
ஆஸ்பெர்கில்லாஸிஸ் (Aspergillosis) எனப்படும் இந்த வெள்ளைப் பூஞ்சை கறுப்புப் பூஞ்சையை விட நான்கு மடங்கு ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். நுரையீரல், நகம், தோல், வயிறு,சிறுநீரகம்,வாய் மற்றும் பிறப்புறுப்புகளை இந்தவகைப் பூஞ்சைகள் பாதிக்கும் என்கிறார்கள்.குறிப்பாகக் குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.வெண் பூஞ்சையும் கருப்புப் பூஞ்சை மற்றும் கொரோனா போலவே அறிகுறிகள் காண்பிக்கும். கொரோனா போன்று இதற்கும் பரிசோதனை தேவை
குழந்தைகளை பாதிக்கக் காரணம் என்ன?
குழந்தைகள் மற்றும் பெண்களில் வெள்ளைப் பூஞ்சைகளின் தாக்கம் அதிகம் இருக்கிறது. குறிப்பாகப் பெண்களில் லுக்கோரியா என்னும் வெள்ளைபடுதல் கோளாறு ஏற்பட இது முக்கியக்காரணமாக இருக்கிறது.
வெள்ளைப் பூஞ்சையும் கறுப்புப் பூஞ்சை போலத்தான் நோய் எதிர்ப்பு சத்து குறைவாக இருப்பவர்களை பாதிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களையும் மிக நீண்டகாலமாக ஸ்டீராய்ட் மருந்து எடுத்துக்கொள்பவரையும் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
டயாபர் அணியும் குழந்தைகளில் ஆசனவாய்ப் பகுதிகளில் வெண் திட்டு போன்ற கேண்டிடையாசிஸ் எனப்படும் பூஞ்சைத்தொற்று உருவாக இந்த வகை வெள்ளைப் பூஞ்சைகள் காரணமாக இருக்கின்றன.இந்த நோய்த்தாக்கத்தால் இது இல்லாமல் வாயிலும் பூஞ்சைக்கிருமிகள் சேரத் தொடங்குகின்றன. மருத்துவர்களைப் பொருத்தவரையில் ஆக்சிஜன் செலுத்தப்படும் கொரோனா நோயாளிகளில் இந்த வெண் பூஞ்சை உருவாகுவதாகச் சொல்கிறார்கள்.மேலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களிலும் இந்தவகைப் பூஞ்சைத் தாக்கம் காணப்படுகிறது. வெண் பூஞ்சையும் கறுப்புப் பூஞ்சை மற்றும் கொரோனா போலவே அறிகுறிகள் காண்பிக்கும். கொரோனா போன்று இதற்கும் பரிசோதனை தேவை என்கிறார்கள் மருத்துவர்கள்.
பாட்னாவில் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் கொரோனா போன்ற தொற்று அறிகுறிகள் தென்படவே அவர்களில் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது இருந்தும் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே வழியாக நுரையீரலில் தொற்று தென்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை செய்ததில் அவை வெண் பூஞ்சை எனத்தெரிய வந்திருக்கிறது. வெள்ளைப் பூஞ்சையும் கறுப்புப் பூஞ்சை போலத்தான் நோய் எதிர்ப்பு சத்து குறைவாக இருப்பவர்களை பாதிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களையும் மிக நீண்டகாலமாக ஸ்டீராய்ட் மருந்து எடுத்துக்கொள்பவரையும் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
வெள்ளைப் பூஞ்சை நோய் வராமல் தடுக்க வெண்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் செலுத்தியை சானிடைஸ் செய்து சுத்தமாக வைத்திருந்தாலே போதுமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.